திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

பாலாவை சுத்தி சுத்தி அடிக்கும் ஏழரை சனி.. கடைசி வரைக்கும் வணங்காமல் போன வணங்கான்

Vanangan Movie: வணங்கான் படத்தின் படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே ஒரே அக்கப்போர் தான். முதலில் அந்தப் படத்தின் ஹீரோ சூர்யாவிற்கும் இயக்குனர் பாலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் ட்ராக் ஆனது. அதன் பின் சூர்யா படத்தில் இருந்து விலகியதும் பாலா, சூர்யாவிற்கு பதில் அருண் விஜய்யை நடிக்க வைத்துள்ளார்.

ஆனால் இப்போது வணங்கான் படத்தின் டைட்டிலுக்கு பெரிய பஞ்சாயத்தே ஏற்பட்டுள்ளது. கேமராமேன் சரவணன் ஏற்கனவே வணங்கான் என்ற டைட்டிலில் ஒரு படத்தை பதிவு செய்து, டீசரை சென்சார் செய்துள்ள நிலையில், பாலா இப்போது தான் வணங்கன் என்ற படத்தை எடுத்து வருகிறார்.

இப்போது வணங்கன் படத்தின் டைட்டில் யாருக்கு என்ற பஞ்சாயத்து இருதரப்பும் இடையே நடந்து வருகிறது. இந்த தலைப்பு பிரச்சனைக்கு காரணம், இரு வெவ்வேறு கவுன்சிலில் கேமராமேன் சரவணன் மற்றும் இயக்குனர் பாலா தங்கள் படங்களை ஒரே தலைப்பை பதிவு செய்தது தான் என்ற தகவல் வெளியாகிறது.

Also Read: 7 கோடி நஷ்டத்திற்கு வந்த விடிவுகாலம்.. சைக்கோ இயக்குனருக்கு அப்பாவை தூது அனுப்பிய சூர்யா

வணங்கான் டைட்டிலுக்கு ஏற்பட்ட பஞ்சாயத்து

ஒருத்தருக்கு பிரச்சனை வரலாம், ஆனால் சுத்தி சுத்தி இப்படியா அடிப்பது என பாலா இப்போது விரக்தி அடைந்துள்ளார். அதோடு இந்த டைட்டில் பிரச்சனையை எப்படி சரி செய்ய போவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார். தற்போது பாலாவிற்கு சுத்தி சுத்தி ஏழரை சனி அடிக்கிறது. அவருடைய ஏழரை இப்போது அருண் விஜய்யையும் தொற்றிக் கொண்டது.

அவர் எடுத்த படங்களில் எப்படி நடிகர் நடிகைகளை கெட்ட வார்த்தைகளில் திட்டி, வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்தாரோ அதற்கெல்லாம் இப்போது அனுபவிக்கிறார், எல்லா சூர்யாவிட்ட சாபம் தான்! என்று நெட்டிசன்களும் பாலாவை கிண்டலடிக்கின்றனர். சமீபத்தில் கூட வணங்கான் படத்திலிருந்து விலகிய மலையாள நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா தன்னை முதுகில் அடித்ததாக நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாக சொல்லி, பெரும் பரபரப்பை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: விலங்குகளுக்கு கூட பாதுகாப்பு இருக்கு எங்களுக்கு இல்லையா.? சைக்கோ பாலாவிடம் சிக்கிய வணங்கான் நடிகை

Trending News