புதன்கிழமை, ஜனவரி 1, 2025

என்ன வச்சி சம்பாதிக்கிறவங்க, சம்பாதிக்கலாம்.. கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்த வாணி போஜன்

வாணி போஜன் தெய்வமகள் சீரியலில் பிரபலமாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமான வாணி போஜன் பல ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார், தற்போது இவர் கிசுகிசுவில் மாட்டிக் கொண்டுள்ளார்.

அதுவும் நடிகருடன் காதல் என்கிற வகை கிசுகிசுவில் மாட்டிக் கொண்டுள்ளாராம். நடிகர் வைபவ், வாணி போஜன் இருவருக்கும் இடையே காதலா என்ற கேள்வி திரை வட்டாரத்தில் கிசுகிசுத்து கொண்டிருக்கிறது. இது குறித்து வாணி போஜனிடம் கேட்கும் போது சினிமாவில் வந்துவிட்டால் கிசுகிசு என்பது சர்வ சாதாரணமானது.

கிசுகிசுக்களுக்கு எல்லாம் தொடக்கத்தில் மிகவும் வேதனை படுவேன். ஆனால், இப்போது அதனை பார்க்கும் போதெல்லாம் சிரிப்புதான் வருகிறது. இந்த கிசுகிசுக்களை பார்த்து நீங்கள் யாரும் வேதனைப்பட வேண்டாம் என்று என் குடும்பத்தினரிடமும் கூறிவிட்டேன்.

என் பெயரை பயன்படுத்தி சம்பாதிப்பவர்கள் சம்பாதித்துக் கொள்ளட்டும். ஆனால் நான் போகிற பாதை வேறு என்று கூறியிருக்கிறார் வாணி போஜன். சமீபத்தில் நடித்த மகான் திரைப்படம் வாணிபோஜன்க்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

ஏனென்றால் போஸ்டரில் விளம்பரப்படுத்தினார், ஆனால் எதிர்பார்த்த அளவு படத்தில் காட்சிகள் இல்லாமல் கட் செய்து விட்டனர்.  இந்த நிகழ்வு வாணிபூஜன் மிகவும் பாதிப்பு உள்ளதாம். இதனால் சினிமாவை விட்டு சீரியலுக்கு சென்று விடலாம் என்பது போன்ற யோசனையும் தற்போது வருகிறதாம்.

எது எப்படியோ துணிச்சலாக கிசுகிசுக்களை எதிர்கொள்வதற்கு வாணி போஜன் பழகி விட்டார் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதே துணிச்சலுடன் இன்னும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.

Trending News