Vanthi vs Lakshmi Ramakrishnan: நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எப்போதுமே பொதுமக்களிடம் நல்ல மரியாதை உண்டு. சில மீடியாக்கள் அவர்களுடைய சொந்த விருப்பத்திற்காக லட்சுமி ராமகிருஷ்ணன் மீது ஒரு விதமான வெறுப்பு சாயத்தை பூசினாலும், அவர் எப்போதுமே மக்கள் மரியாதை கொடுக்கும் இடத்தில் தான் இருக்கிறார்.
அதே நேரத்தில் வனிதா விஜயகுமாரை பற்றி சொல்லவே தேவை இல்லை. அவர் எப்போ எப்படி மாறுவார் என உண்மையில் அவருக்காவது தெரியுமா என்ன என்று தெரியவில்லை. அதுவும் பிக் பாஸ் முடிந்த கையோடு தன்னுடைய மகள் ஜோவிகாவை எப்படியாவது சினிமாவில் பெரிய ஆளாக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்டு அவர் செய்யும் அழிச்சாட்டியம் அதிகம்.
வனிதாவுக்கு மக்களிடையே நல்ல பேர் இல்லை என்றாலும் விளம்பரத்திற்காகவாது அவரை பல விழாக்களுக்கு கூப்பிடுவது வழக்கமாகிவிட்டது. அப்படி ஒரு விழாவில் வனிதா விஜயகுமாரும் லட்சுமி ராமகிருஷ்ணனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் சந்தர்ப்பம் அமைந்து விட்டது.
உரசாமலேயே பத்தி கிட்ட வத்திக்குச்சி
சரி மீடியாவில் இருப்பவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டால் இப்போ என்ன என்று சிலருக்கு தோணலாம். அதற்கு இரண்டு, மூன்று வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தினால் தான் புரியும்.
வனிதா விஜயகுமார் தன்னுடைய மகள் ஜோதிகா பெரிய மனுஷியான கையோடு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தது எல்லோருக்கும் தெரியும். அந்த பீட்டர் பாலின் மூத்த மனைவி வனிதாவுக்கு எதிராக பல பேட்டிகளில் பேசியிருந்தார்.
அந்த சமயத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு யூ டியூப் சேனலில் சொல்வதெல்லாம் உண்மை போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அந்த நிகழ்ச்சியில் பீட்டர் பாலின் மூத்த மனைவி கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் சில நாட்களுக்கு ஒரு லைவ் நிகழ்ச்சியில் வனிதா மற்றும் லஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நேரடி ஒளிபரப்பு என்று கூட பார்க்காமல் வனிதா விஜயகுமார் லட்சுமி ராமகிருஷ்ணனை எந்த அளவுக்கு தாழ்வாக பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசினார். ஒரு கட்டத்தில் இவருடைய ரேஞ்சுக்கு நாம் இறங்கக்கூடாது என நினைத்த லட்சுமி ராமகிருஷ்ணன் எதுவுமே பேசாமல் அந்த லைவை முடித்துக் கொண்டார்.
இந்த விஷயம் அப்போது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் பேசும் பொருளானது. இதைத்தொடர்ந்து பிதா படத்தின் விழாவில் லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா விஜயகுமார் இருவரும் அருகருகே சாரில் அமருவது போன்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
அப்போது வனிதா இறங்கி வந்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வணக்கம் சொல்லியும் அவர் வனிதாவை கண்டு கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் உட்கார தர்ம சங்கடப்பட்டு வனிதா வேறு இடத்திலேயே மாறி உட்கார்ந்து விட்டார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள் என்பார்கள் அதை தான் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்வில் செய்து காட்டியிருக்கிறார்.
வனிதா விஜயகுமார் செய்த சேட்டைகள்