வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பகிர் கிளப்பிய வனிதா.. பீட்டர் பால் மறைந்து ஒரு மாசம் கூட ஆகவில்லை அதற்குள் 4வது காதல்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளார். அதில் இவரது திருமண வாழ்க்கையும் அடங்கும். அதாவது முதலில் நடிகர் ஆகஷை வனிதா திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு சில வருடங்களில் பிரிந்தார். அதற்கு அடுத்தபடியாக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் மாஸ்டரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

Also Read : குந்தவை திரிஷா காதலனுடன் டேட்டிங் செய்த பிக் பாஸ் பிரபலம்.. பகிரங்கமாக ஒத்துக் கொண்ட நடிகை

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது சமையல் திறமையை காட்டி அசத்தியிருந்தார். மேலும் டைட்டில் வின்னர் பட்டத்தையும் அடித்தார். இதைத்தொடர்ந்து சமையல் திறமையை காட்ட யூடியூப் சேனல் ஒன்று தொடங்கினார்.

அதில் அவருக்கு உதவியாளராக வந்தவர் தான் பீட்டர் பால். ஏற்கனவே திருமணமான இவரை மூன்றாவது முறையாக வனிதா விஜயகுமார் கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டார். இது யூடியூப்பில் மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு சில மாதத்திலேயே பிட்டர் பாலை வனிதா பிரிந்துவிட்டார்.

Also Read : எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு.. 2வது கணவரின் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

இந்நிலையில் கடந்த மாதம் பீட்டர் பால் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கு வனிதா எந்த இரங்கலும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் பெற்றுள்ளார் வனிதா விஜயகுமார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்தபோது ஆண்டவன் அருளால் எனக்கு திரும்பவும் யார் மீது வேண்டுமானாலும் காதல் ஏற்படலாம் என புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். அதுமட்டுமின்றி அப்படி நடந்தால் என் வாழ்க்கையில் சரியான முடிவை எடுப்பேன் எனவும் கூறியுள்ளார். பீட்டர் பால் இறந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் 4வது காதலா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Also Read : பீட்டர் பால் இறப்புக்கு முழுக்க முழுக்க காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த வனிதா

Trending News