பிக் பாஸ் 8 நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. முதல் வாரத்தில் ரவீந்தர் சந்திரசேகரனும், இரண்டாவது வாரத்தில் அர்னவும் வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து தற்போது பிக் பாஸ் வீட்டில் 16 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடந்த டாஸ்க் பலருக்கும் முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. கில்லர் காயின் யாருடைடையாவது கையிலோ, அல்லது முதுகிலோ வைக்கப்பட்டால், அவர்கள் அவுட். இதில் ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் இருப்பதனால், தனி தனி டீம் ஆக விளையாடினார்கள்.
இதில் பெண்களை ஒரே அடியாக ஆண்கள் ஓவர் டேக் செய்து லாக் பண்ணிவிட்டார்கள். முத்துக்குமரன் ஆரம்பிக்க, மற்றவர்கள் ஆட்டுமந்தை கூட்டம் போல செயல்பட்டார்கள். சுனிதாவை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. மேலும் ரஞ்சித், தர்ஷிகாவை நகரவிடாமல் செய்தார்.
நாம் காலம் காலமாக பார்க்கும் wrestling-ல் கூட ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் தான் விளையாடுவார்கள். ஆனால் இதில், இவர்கள் செய்ததை பார்க்கவே அருவருப்பாக தான் இருந்தது. இதெல்லாம் ஒரு டாஸ்க் ஆ என்று தான் கேட்க தோன்றியது.
பாக்க gang r*pe மாதிரி இருக்கு..
இந்த நிலையில் தினமும் contestants செயல் பாடுகளை விமர்சித்து வரும் வனிதா தற்போது காட்டமாக தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, “ஒரு அத்துமீறல் ஏன் குற்றமாகிறது? அதில், உடல் ரீதியான உறவு இருப்பதால் அல்ல.. அது ‘violence’. இங்கும் அதே தான் நடந்துள்ளது.”
“இருவரின் பிறப்புறுப்பு involve ஆனால் மட்டும்தான் அது குற்றம் என்பது கிடையாது. எனக்கு இதை நேற்று பார்க்கும்போது, அவ்வளவு கோவம் வந்தது. பார்க்க gang r*pe மாதிரி இருந்தது..” என்று காட்டமாக பேசி இருக்கிறார்.
ஆனால் இவர் விமர்சிக்க வேண்டும் என்றால், இப்படி பட்ட ஒரு டாஸ்க் கொடுத்த பிக் பாஸ் -சை தான் விமர்சிக்க வேண்டும். அங்கு உள்ள contestants என்ன செய்வார்கள்.