வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புளுகுமூட்டை! மண்ட மேல இருக்க கொண்டையை மறந்த வனிதா.. ஆதாரத்துடன் வச்சு செய்யும் பிரதீப் ஆர்மி

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் அவருடைய ஆதரவாளர்கள் தன்னை தாக்கி விட்டதாக இரண்டு நாட்களுக்கு முன்பாக வனிதா விஜயகுமார் போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். கண் மற்றும் கன்னம் வீங்கிய நிலையில் அதற்கு மருந்து பூசிய படி வனிதா எடுத்த புகைப்படம் தான் அது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை இப்படி ஒரு சம்பவம் நடந்ததே கிடையாது. முதல் சீசனில் ஜூலிக்கு அவ்வளவு எதிர்ப்பு இருந்த போதும் அவர் வெளியே வந்த போது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் ஜோவிகா விளையாடிக் கொண்டிருக்கும் சீசனில் வனிதா விஜயகுமார் ஏன் தாக்கப்பட்டார் என்ற கேள்வி எல்லோருக்குமே இருந்தது.

ஒரு பக்கம் வனிதாவுக்கு ஆதரவாக நிறைய பேர் பேசி வருகிறார்கள். பிரதீப் ஆண்டனி கூட வனிதாவுக்காக ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார். அந்த ட்வீட்டில் கடைசி வரியில் அவர் ஜோவிகா ஒரு நல்ல போட்டியாளர். அவர் அவராகவே விளையாடி ஜெயிப்பார். உங்களுடைய உதவி அவருக்கு தேவைப்படாது என்று சொல்லி இருந்தார். இந்த விஷயம் தான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியது.

Also Read:அத்தனையும் நாடகமா பேபி.? வனிதா மூஞ்ச ஒடச்சது யாரு.? சந்தேகத்தை கிளப்பிய 3 விஷயங்கள்

ஜோவிகா இந்த வாரம் எலிமினேஷனுக்காக நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார். இன்றைய ஓட்டு நிலவரப்படி கூட அவர்தான் கடைசியில் இருக்கிறார். விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ஓட்டிங் வெப்சைட்டிலும் அவர் கடைசியாக இருந்தால் இந்த வாரம் அவர்தான் மூட்டை முடிச்சை கட்ட வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையை தான் வனிதா அவர் தாக்கப்பட்டதாக சொல்லி வருகிறார்.

ஆதாரத்துடன் சிக்கிய வனிதா விஜயகுமார்

இதற்கிடையில் இன்று பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தபோது தனது காயம் பட்ட முகத்தை காட்டி இருந்தார். அன்று பகிரப்பட்ட புகைப்படத்தில் அவருடைய இடது கன்னத்தில் அடிபட்டது போல் இருக்கும். அடிப்பட்ட இடத்திற்கு மேல் இரண்டு மச்சமும் இருந்தது. இன்று அவர் முகத்தில் வலது பக்கத்தில் அடிபட்டது போல் காட்டி இருக்கிறார். கேமரா ஆங்கிளால் இடது, வலது வித்தியாசம் இருக்கும் ஆனால் மச்சம் மாறாது.

இந்த ஆதாரத்தை வைத்து தான் இப்போது நெட்டிசன்கள் வனிதா சொன்னது பொய் என வைரல் ஆக்கி வருகிறார்கள். முகத்தில் கண்ணம் மற்றும் கண்ணுக்கு கீழே இருக்கும் பகுதி பளபளப்பாக இருக்க ஒரு சிகிச்சை செய்யப்படும். அது ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு இது போன்ற பக்கவிளைவு தான் காட்டும். உதாரணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு ரைசா வில்சன் இப்படி பாதிக்கப்பட்டிருந்தார்.

வனிதா விஜயகுமார் மற்றும் ரைசா வில்சன்

facial
facial

சிகிச்சையை மேற்கொண்டு விட்டு ரைசா மது அருந்திய நிலையில் அவருடைய முகம் இதேபோன்றுதான் வீங்கி இருந்தது. சிகிச்சை செய்து கொண்ட பார்லர் மீது ரைசா புகார் கொடுத்திருந்த நிலையில், பார்லர் தரப்பிலிருந்து இந்த விஷயம் விலக்கப்பட்டது. வனிதாவும் இந்த சிகிச்சையை தான் செய்திருக்க வேண்டும். அதன் பக்கவிளைவு இப்படி வரவும் இதை தன்னுடைய மகளின் ஆதரவுக்காக பயன்படுத்திக் கொண்டார் என கமெண்ட் செய்து வருகிறார்கள் பார்வையாளர்கள்.

Also Read:பிரதீப் ரெட் காடுக்காக விழுந்த அடி.. மர்ம நபர்கள் வனிதாவின் கன்னத்தை பழுக்க வைத்த புகைப்படம்

Trending News