வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

புது லுக்கில் ஷாக் கொடுக்கும் வனிதா.. ஜீன்ஸ், பாப்கட் என ஆளே மாறிய புகைப்படம்

எப்போதுமே ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வரும் வனிதா விஜயகுமார் சோசியல் மீடியாவில் ரொம்பவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். எவ்வளவுதான் தன்னை பற்றி மோசமான விமர்சனங்கள் வந்தாலும் அதை அசால்டாக கையாண்டு வரும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சில சர்ச்சைகளுக்கும் ஆளானார்.

மேலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவர் வத்திக்குச்சி என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். இப்படி சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தற்போது அவர் தன்னுடைய இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Also read: இது கோழியா? இல்ல காக்காவா? KFC-யுடன் மல்லுக்கு நிற்கும் வத்திக்குச்சி வனிதா

அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு படத்திற்காக தற்போது அவர் தன்னுடைய லுக்கையே முற்றிலுமாக மாற்றி இருக்கிறார். அதாவது வைஜெயந்தி என்னும் போலீஸ் ஆபீஸராக அப்படத்தில் அவர் நடித்து வருவதால் தற்போது தன் தோற்றத்தை மாற்றி இருக்கிறார்.

புது லுக்கில் ஷாக் கொடுக்கும் வனிதா

vanitha-vijaykumar
vanitha-vijaykumar

அந்த வகையில் தன் சோசியல் மீடியா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோவை பார்த்த பலரும் வனிதாவா இது என்று ஆச்சரியப்பட்டு போகின்றனர். அந்த அளவுக்கு அதில் ஜீன்ஸ், பாப்கட் என ஆளை அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் மாறிப் போய் இருக்கிறார்.

Also read: இவன் ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்ல.. வனிதாவின் திமிர் பேச்சுக்கு பிக் பாஸில் விக்ரமன் கொடுத்த பதிலடி

மேலும் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மாடர்ன் லுக்கில் வனிதா வெளியிட்டுள்ள அந்த போட்டோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த போட்டோவில் அவர் சற்று உடல் இளைத்தும் காணப்படுகிறார். ஆனால் அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.

இப்படி ஒரு புது லுக்கில் ஷாக் கொடுத்திருக்கும் வனிதாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த தோற்றம் உங்களுக்கு நன்றாக பொருந்தி இருக்கிறது எனவும் ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Also read: நயன்தாராக்கு ஓவராக கருத்து சொன்ன கஸ்தூரி.. வெளுத்து விட்ட வத்திக்குச்சி வனிதா!

Trending News