திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது.. வில் ஸ்மித்க்கு ஆதரவாக களமிறங்கிய வனிதா

வனிதாவை சுற்றி எப்போதும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வந்த வண்ணம் இருக்கும். இவருக்கு குடும்பத்திலும் ஒரு சில பிரச்சனைகள் இருந்ததால் சில வருடங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருந்தார். என்னதான் குடும்பத்தை விட்டு விலகி இருந்தாலும் அப்பாவின் பாசம் இன்று வரை தன்னுள் இருப்பதாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தனது அப்பாவுடன் சேர விருப்பம் இருப்பதாகவும் ஆனால் ஒரு சில காரணங்களால் இன்று வரை என்னால் சேர முடியவில்லை கண்ணீர் மல்க கூறினார்.

சமீபத்தில் கூட வனிதா மீண்டும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் சக போட்டியாளர்களுடன் சண்டை சச்சரவு என தொடர்ந்தது பிரச்சினை செய்து வந்தார் ஒரு கட்டத்திற்கு மேல் இவரால் மன அழுத்தம் தாங்க முடியாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.இந்த விழாவிற்கு அவரது மனைவியும் கலந்து கொண்டார். ஆனால் மேடையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் வில் ஸ்மித்ன் மனைவியை கிண்டல் செய்து பேசி வந்தார்.

அதாவது வில் ஸ்மித்தின் மனைவிக்கு தலையில் முடி கிடையாது. அதனை வைத்து தொகுப்பாளர் கிரிஸ் ராக் கிண்டல் செய்து பேசிவந்தார். இதனால் கோபமடைந்த வில் ஸ்மித் மேடையிலேயே தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்து விட்டு தகாத வார்த்தையில் திட்டி விட்டு வந்தார். அதன்பிறகு அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தான் அனைவர் முன்னிலையிலும் தான் நடந்து கொண்டது தவறு தன்னை மன்னித்து கொள்ளுங்கள் என கூறியிருந்தார்.

இந்நிலையில் வில் ஸ்மித் பதிவை ஷர் செய்து வனிதா தன் பெண்ணைக் காக்க ஆணே போதும். தன் தவறை ஏற்கும் ஆண் போதும், உங்கள் மிகப்பெரிய ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.

அதாவது தன்னுடைய மனைவியை கிண்டல் செய்வதற்காக வில் ஸ்மித் மனைவிக்கு ஆதரவாக பேசியது நல்லது. ஆனால் அதே சமயம் அனைவரும் முன்னிலையிலும் ஒரு மனிதனை அடித்தது தவறு என்பதை புரிந்து கொண்டு மன்னிப்பு கேட்டதை நான் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.

Trending News