வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வனிதாவால் சினிமா மீது வந்த அருவருப்பு.. 2 வருடமாக பட வாய்ப்பை நிராகரிக்கும் நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் வனிதா விஜயகுமார். இவர் கலந்து கொண்ட சீசனில் அதிக சண்டை வர காரணம் வனிதா தான் என பரவலாக பேசப்பட்டது. இதனால் வத்திக்குச்சி வனிதா என்றும் இவரை அழைத்தனர்.

இந்நிலையில் வனிதாவால் இரண்டரை வருடமாக தனக்கு வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறார் ஒரு நடிகை. அதாவது கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு இணையத்தில் பேசு பொருளாக மாறியது வனிதாவின் மூன்றாவது திருமணம். பீட்டர் பால் என்பவரை வனிதா கிறிஸ்டின் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

Also Read :வத்திக்குச்சி வனிதாவிடம் வசமாக சிக்கிய சிம்பு பட தயாரிப்பாளர்.. கொண்டாடும் நெட்டிசன்கள்

ஆனால் வனிதா, பீட்டர் பால் இருவரும் சில நாட்களிலேயே பிரிந்து விட்டனர். இதற்கிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நியாயம் வேண்டி பல இடங்களை நாடி இருந்தார். நடிகை மற்றும் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபத்துக்கு ஆதரவாக பேசும் போது ஒரு பேட்டி நேர்காணலில் வனிதா தரைகுறைவாக பேசி இருந்தார்.

அதில் யாரும் காது குடுத்து கேட்க முடியாத அளவுக்கு வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனை கண்டபடி பேசியிருந்தார். இதற்கு அந்த சமயத்தில் கடுமையான விமர்சனம் எழுந்தது. சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் வனிதாவின் பெயரை கூட சொல்ல விரும்பாத அவர் ஒரு நடிகையால் இரண்டரை வருடமாக தனக்கு வந்த வாய்ப்பை நிராகரித்து வருவதாக கூறியிருந்தார்.

Also Read :பனியன் மட்டும் போட்டு இணையத்தை அலறவிட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்.. கலக்கல் புகைப்படம்

லட்சுமி ராமகிருஷ்ணன் 2006க்கு பின்பு தான் சினிமாவில் நுழைந்தார். பல படங்களில் நடித்து வந்த இவர் 2012 ஆம் ஆண்டு அரோக்கணம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்பு பல படங்களை இயக்கி சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை பெற்றார்.

இதைத்தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபலமானார். ஆனால் வனிதா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமா மீது அருவருப்பு ஏற்பட்டு ஒதுங்கி உள்ளதாக லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Also Read :நேருக்கு நேராக கலாய்த்த வனிதா.. பொறுமை இழந்து கோபப்பட்ட விஜய்

Trending News