சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

நடிக்க மறுத்ததால் டம்மியான வரலட்சுமி.. டீச்சருக்கு சென்ற வாய்ப்பு

பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் பல சோதனைகளை தாண்டி இன்று ஒரு சாதனை படமாக மாறி இருக்கிறது. இப்படி ஒரு முயற்சியை துணிந்து செயல்படுத்தியதற்காக பார்த்திபனுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

அதிலும் படத்தில் முக்கிய காட்சியில் நடித்திருந்த பிரிகிடாவின் நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த காட்சி சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவருடைய முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

இந்த ஒரு படத்தின் மூலம் அவர் தற்போது அதிக அளவில் பிரபலமாகி இருக்கிறார். ஆனால் இந்த படத்தில் அவர் நடித்த கேரக்டருக்கு முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகை வரலட்சுமி தான். ஆனால் இது போன்ற கேரக்டரில் நடிப்பதற்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அதன் பிறகு தான் பார்த்திபன் அந்த கேரக்டரில் நடிக்க பிரிகிடாவை சம்மதிக்க வைத்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார் இந்த படத்தில் பிரேம குமாரி என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படம் வெளிவருவதற்கு முன்பு அவருடைய கேரக்டர் குறித்து நிறைய எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. சொல்லப்போனால் அவர் அந்த படத்தில் நடித்ததற்கான அடையாளமே தெரியாமல் இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பலரின் நடிப்பை பற்றியும் பேசிய ரசிகர்கள் வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் குறித்து பெரிய அளவில் கருத்து தெரிவிக்கவில்லை.

இதுவே அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் பார்த்திபன் அவரை இந்த படத்தில் நடிக்க வைத்து வேஸ்ட் செய்து விட்டார் என்ற ஒரு கருத்தும் எழுந்து வருகிறது. மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேடி நடித்துக் கொண்டிருக்கும் வரலட்சுமி இந்த படத்தில் டம்மியாக காட்டப்பட்டு விட்டார் என்ற ஆதங்கமும் ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

Trending News