மகளோட வளர்ச்சிக்கு தடையாக இருந்த நாட்டாமை.. சரத்குமாரால் சங்கர் பட வாய்ப்பை இழந்த வரலட்சுமி

sarathkumar-shankar
sarathkumar-shankar

Varalakshmi: வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு வந்தாலும் வரலட்சுமி தன் நடிப்பு திறமையால் மட்டுமே முன்னேறி இருக்கிறார். ஹீரோயின் கேரக்டர் கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இன்று தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் ரொம்ப பிசி. இப்படி இருக்கும் இவரை ஆரம்ப காலத்தில் நடிக்கவே கூடாது என அவருடைய அப்பா சரத்குமார் தடை உத்தரவு போட்டாராம்.

அதன் பிறகு அவருடைய முன்னாள் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி ராதிகா இருவரும் சொன்ன பிறகுதான் சம்மதித்திருக்கிறார். அந்த சமயத்தில் ஷங்கரின் பாய்ஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வரலட்சுமிக்கு வந்திருக்கிறது.

ஆனால் சரத்குமார் ஷங்கருக்கு போன் போட்டு தன் மகள் நடிக்க மாட்டார் என்று கூறிவிட்டாராம். இதை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தற்போது ஒரு வீடியோவில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சங்கர் பட வாய்ப்பை இழந்த வரலட்சுமி

அதன் பிறகு தான் ஜெனிலியா அந்த கேரக்டரில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். படம் சில விமர்சனங்களை பெற்றாலும் அதில் நடித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்தது.

ஆனால் அது சரத்குமாரால் வரலட்சுமிக்கு கைநழுவி போயிருக்கிறது. இருந்தாலும் சரத்குமார் சம்மதத்துடன் நடிக்க வந்த அவர் இப்போது நல்ல நடிகை என்ற பெயரை வாங்கி இருக்கிறார்.

அதேபோல் தான் விஷால் விஷயத்திலும் சரத்குமாரின் கண்டிப்பு இருந்திருக்கிறது. அதனாலயே அவர்கள் பிரிந்து விட்டதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போது நிக்கோலாய் என்பவரை தன் அப்பா சம்மதத்துடன் கரம் பிடித்திருக்கிறார் வரலட்சுமி.

கடந்த சில தினங்களாக இவர்களுடைய ப்ரீ வெட்டிங் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று தாய்லாந்தில் இவர்களுடைய திருமணம் நடைபெறுகிறது. அதற்கு இப்போது பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வரலட்சுமி வளர்ச்சிக்கு தடையாய் இருந்த சரத்குமார்

Advertisement Amazon Prime Banner