புதன்கிழமை, ஜனவரி 8, 2025

மக்களை ஏமாற்றி கேவலமான வேலை செய்யும் வரலட்சுமி .. பாடாய்படுத்தும் பணத்தாசை

நாம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம் என்று நாமே புலம்பும் வகையில் இருக்கிறது இன்றைய மக்களின் நிலைமை. இப்படி நம்மை யோசிக்க வைக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை அறிவித்துள்ளது அந்த நிறுவனம். சமீபகாலமாக முடி கொட்டுதல், உடல் எடை போன்ற அனைத்திற்கும் தீர்வு தருகிறோம் என்று பல புதுப்புது நிறுவனங்களும் முளைத்து வருகின்றன.

அப்படி உடல் எடையை மிகவும் எளிதாக குறைக்கலாம் என்று விளம்பரப்படுத்தி மக்களை கவரும் ஒரு நிறுவனம்தான். இப்போது இல்லத்தரசிகளிடம் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். அந்த விஷயத்தை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்த நிறுவனம் தற்போது கண் கவரும் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதில் ஒன்றுதான் 5 கிலோவுக்கு 5 கிலோ இலவசம் என்ற அறிவிப்பு. இதைக் கேட்கும் போது உங்களுக்கு ஒன்று நினைவுக்கு வரலாம். அதாவது சமீபகாலமாக சென்னையில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற அறிவிப்பு திரும்பும் பக்கம் எல்லாம் இருக்கிறது.

அதே போன்றுதான் இந்த நிறுவனமும் இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை அறிவித்துள்ளது. அதாவது இந்த நிறுவனத்தில் சேர்ந்து 5 கிலோ எடையை குறைப்பதற்கு நாம் பணம் கட்டினால் அவர்கள் இலவசமாக மேலும் ஒரு 5 கிலோ எடையை குறைத்து நம்மை ஸ்லிம்மாக மாற்றி விடுவார்களாம்.

இது என்ன காய்கறி சந்தையா என்று பலருக்கும் கோபம் வரலாம். ஆனால் இப்படி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மோசமான விஷயத்திற்கு சில நடிகைகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தற்போது இருக்கும் நடிகைகள் அனைவரும் பணம் கிடைக்கிறதே என்று மதுபானத்தை கூட விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது வரலட்சுமி சரத்குமாரும் இணைந்திருக்கிறார். அந்த நிறுவனம் கொடுக்கும் இதுபோன்ற ஆபர்களுக்கு அவர் விளம்பரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் தன்னுடைய உடல் எடையை குறைத்து இருக்கும் அவர் இதற்கு காரணம் கலர்ஸ் நிறுவனம் தான் என்று சோசியல் மீடியாவில் கூறி வருகிறார். மேலும் இதனால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்றும் கூறுகிறார். பெண்களுக்காக சேவ் சக்தி என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வரும் வரலட்சுமி இப்படி ஒரு விஷயத்திற்கு துணையாக இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த நிறுவனத்தை லக்ஷ்மி ராய், மும்தாஜ், சிம்ரன், ரம்பா போன்ற நடிகைகளும் விளம்பரப்படுத்தி வருகின்றனர். மேலும் நடிகைகள் குண்டாக இருப்பதுபோன்ற போட்டோவைக் காட்டி இதன் மூலம்தான் அவர்கள் உடல் எடை குறைந்தது என்றும் கூறிவருகின்றனர். அதைப்பார்த்து மக்களும் ஏமாறுகின்றனர்.

Trending News