வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தமிழ் சினிமா வெறுத்து ஒதுக்கிய வரலட்சுமி.. அக்கட தேசத்தில் குவியும் பட வாய்ப்பால் எகுறிய சம்பளம்

நடிகர்களை காட்டிலும் நடிகைகளுக்கு சம்பளம் குறைவுதான் இதுகுறித்து பல விவாதங்கள் நடைபெற்று வந்தாலும் நடிகைகளை கவர்ச்சிக்காக மட்டுமே பல படங்களில் காட்சிப்படுத்தப்படுகின்றனர்.மேலும் அவர்களின் கால்ஷீட் தேதியும் குறைவு என்பதால் அவர்களுக்கு சம்பளம் குறைவு என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக தங்களுக்கு மார்க்கெட் இருக்கும்போதே லட்சத்தில் இருந்த சம்பளத்தை கோடியில் உயர்திக்கொள்வார்.

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக களமிறங்கியவர் தான் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். எப்போதும் தைரியமாக பேசியும், துணிச்சலான கதாபாத்திரத்திலும் நடித்தும் ரசிகர்கள் கவர்ந்து வருபவர். தனது சொந்த குரலிலேயே பேசியும், பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை தேர்ந்தெடுத்தும் நடித்து வரும் இவருக்கு அண்மைக்காலமாக தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது.

Also Read: என்றென்றும் தளபதி.. டி ஷர்ட் அணிந்து முதல் ஆளாக தியேட்டருக்குள் நுழைந்த வரலக்ஷ்மி சரத்குமார்

நடிகை வரலக்ஷ்மி 2012 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தொடர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறையவே, சர்க்கார், சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இருந்தாலும் இவருக்கு பட வாய்ப்புகள் பெரிய அளவில் வராததால் தெலுங்கு சினிமா பக்கமாக சென்றுவிட்டார். அங்கு இவர் வில்லி, துணை நடிகை கதாபாத்திரம் என ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அங்கு இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர்ஹிட்டான நிலையில் ராசியான நடிகை என்ற பெயரையும் எடுத்துள்ளார். இதனிடையே தனது சம்பள பணத்தையும் உயர்த்தியுள்ளார் வரலக்ஷ்மி சரத்குமார்.

Also Read: வரலட்சுமி பூஜை செய்துவிட்டு வாங்கிய விவாகரத்து.. பிரிய முடியாமல் மீண்டும் சேர்ந்த ஜோடி

நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும்போது சம்பளத்தை உயர்திக்கொள்வது என்பது சகஜமானது தான் ஆனால் வரலக்ஷ்மி ஒரடியாக உச்சாணிக்கு சென்று சம்பளத்தை உயர்த்தியுள்ளதை அடுத்து ,தயாரிப்பாளர்களும் இவருக்கு வாரி வாரி சம்பளத்தை வழங்கி வருகின்றனர். தற்போது வரை தன கை வசம்06 தெலுங்கு படங்களை வரிசையா கட்டி வைத்துள்ளார் வரலஷ்மி.

தனது 50 லட்ச ரூபாய் சம்பளத்தை 90 லட்சமாக உயர்த்தி மாஸ் காட்டி வருகிறார் வரலக்ஷ்மி சரத்குமார். மேலும் ஹைதராபாத்தில் சொந்தமாக வீடு ஒன்றை வாங்கியுள்ள வரலக்ஷ்மி அங்கேயே தங்கி கையில் உள்ள படங்களை முடித்து கொடுத்தும் வருகிறார். மேலும் கன்னடம்,தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் கமிட்டாகியுள்ள வரலட்சுமிக்கு, இந்தாண்டு சிறந்த கல்லா கட்டு ஆண்டாக அவருக்கு அமைந்துள்ளது.

Also Read: அந்த மாதிரியான கேரக்டர் எனக்கு மட்டும்தான் பொருந்தும்.. புது ரூட்டை பிடித்த வரலட்சுமி

Trending News