சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வரலட்சுமி உடன் கிசுகிசுக்கப்பட்டு சிக்காமல் சிட்டாய் பறந்த 5 நடிகர்கள்.. ஏமாற்றத்துடன் போன ஒரு தலை காதல்

நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதைகள் மற்றும் சிறந்த நடிப்பினால் தென்னிந்திய ரசிகர்களிடையே பிரபலமானவர். உச்ச நட்சத்திரத்தின் மகளாக இருந்தாலும் தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார் இவர். அதே நேரத்தில் வரலட்சுமி அடிக்கடி காதல் கிசுகிசுகளில் சிக்கியதும் உண்டு. இவர் சினிமாவுக்குள் வந்து இத்தனை வருடங்களில் இந்த ஐந்து நடிகர்களுடன் அதிகமாக கிசு கிசுக்கப்பட்டிருக்கிறார்.

விஷால்: வரலட்சுமி சரத்குமார் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே விஷாலுடன் காதலில் இருந்ததாக செய்திகள் வெளியாகின. பல இடங்களில் வரலட்சுமி மற்றும் விஷால் இந்த செய்தியை பற்றி எந்த தெரிவித்ததே இல்லை. நடிகர் சங்க தேர்தலின் போது சரத்குமார் மற்றும் விஷாலுக்கு இடையே மோதல் ஏற்பட்ட பிறகு இவர்களுடைய காதலும் முடிவுக்கு வந்தது.

Also Read:விஷாலால் திருமணத்தை வெறுத்த வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலம் மீது வந்த திடீர் காதல்

துருவ் விக்ரம்: நடிகர் சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுடன் கடந்த 2018 ஆம் ஆண்டு வரலட்சுமி சரத்குமார் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். இருந்தாலும் இது பற்றி அதிகாரப்பூர்வமாகவோ அல்லது இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாகவும் எந்த ஆதாரங்களும் அமையவில்லை. அந்த செய்தியும் அப்படியே நின்று போனது.

சமுத்திரக்கனி: இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனி தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரும், நடிகை வரலட்சுமி காதலில் இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதற்கேற்றவாறு பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் இவர்கள் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர். அதன் பின்னர் இவர்களுடைய உறவு பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

Also Read:வீட்டை தேடி வந்த அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை.. பத்ரகாளியாய் மாறி பதிலடி கொடுத்த வரலட்சுமி

ரவி தேஜா: தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரவி தேஜா. வரலட்சுமி சரத்குமார் தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைத்த பிறகு, கடந்த 2020 ஆம் ஆண்டு இவர் ரவி தேஜா உடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின . இருவரும் ஒன்றாக பல இடங்களில் தென்பட்டனர். அதன் பின்னர் இவர்களுடைய உறவு பற்றி எந்த தகவலும் இல்லை.

விஜய் சேதுபதி: நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் காயத்ரிக்கு பிறகு விஜய் சேதுபதியுடன் கிசு கிசுக்கப்பட்ட நடிகை என்றால் அது வரலட்சுமி சரத்குமார் தான். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் நெருங்கிய உறவில் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசுக்கள் வெளியாகின. ஆனால் அதை உறுதிப்படுத்தும் அளவிற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

Also Read:நீலாம்பரிக்கு நிகரான அக்மார்க் வில்லி.. வரலட்சுமி சரத்குமாரின் சிறந்த 5 படங்கள்

Trending News