சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Varalakshmi: நாங்க டெய்லி உழைச்சா தான் சம்பளம் ஆக்ரோஷமான வரலட்சுமி.. அவரை கல்யாணம் பண்ண இதுதான் காரணமா?

Varalakshmi: எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது போல் நடிகை வரலட்சுமி சரத்குமார் பேச்சு இருக்கிறது. அதாவது சினிமாவிற்குள் அப்பாவின் புகழை வைத்து நுழைந்து இருந்தாலும் தன்னுடைய தனி திறமை மூலம் ஜெயிக்க வேண்டும் என்று போராடி வருகிறவர். அப்படி இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சற்று வித்தியாசமாகவும் யாருமே எடுத்து நடிக்க முடியாத அளவிற்கு துணிச்சலுடன் சில கேரக்டர்களை நடித்து வருகிறார்.

நான் நடித்தால் ஹீரோயின் ஆகத்தான் நடிப்பேன் என்று நினைக்காமல் கிடைக்கும் கதாபாத்திரத்தின் மூலம் எனக்கு முக்கியத்துவம் கிடைத்தால் போதும் என்று நினைக்கக் கூடியவர். இப்படி இவருடைய கேரியரை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், அதே மாதிரி இவருடைய உண்மையான குணமே எதனாலும் துணிச்சலுடன் பேசி மனதில் பட்டதை டக்கு டக்கு என்று போட்டு உடைக்கக் கூடியவர்.

ஆனால் அப்படிப்பட்ட இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வராமல் தட்டு தடுமாறி கொண்டு வருகிறார். இதனால் தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கிடைக்கிற வாய்ப்பை சரிவர செய்து வருகிறார். அப்படிப்பட்ட இவரை சுற்றி சர்ச்சை வெடித்துக் கொண்டு வருகிறது. அதாவது மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய்க்கு ஏற்கனவே கவிதா என்பவருடன் கல்யாணம் ஆகி 15 வயது மகள் இருக்கிறது.

ஆக்ரோஷமாக பேசிய வரலட்சுமி

இதை தெரிந்தும் வரலட்சுமி, அவரை கல்யாணம் பண்ணப் போகிறார் என்பதுதான் சர்ச்சையானது. ஆனாலும் இதையெல்லாம் பற்றி கண்டுகொள்ளாமல் தூசி போல் தட்டி விட்டு வரலட்சுமி தொடர்ந்து காதலன் நிக்கோலாய் உடன் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஆனால் இதற்குப் பின்னணியில் இப்படி ஒரு காரணமா என்பது தற்போது இவர் பதிவிட்ட ஒரு விஷயத்தின் மூலம் தெரிய வருகிறது.

அதாவது இவர் கூறியது என்னவென்றால் நடிகர்களாக இருப்பது அவ்வளவு சுலபம் கிடையாது. உலகத்திலேயே மோசமான சம்பளம் பெறுபவர்கள் நடிகர்களாகிய நாங்கள் தான். உங்களுக்கெல்லாம் 1ம் தேதி ஆன சம்பளம் வந்துவிடும். ஆனால் எங்களுக்கு எல்லாம் அப்படி சம்பளம் வராது. எங்களுக்கு சூட்டிங் நடந்தால் தான் காசு பணம் கிடைக்கும். அதற்காக நாங்கள் இரவு பகல் பார்க்காமல் தினமும் உழைத்தால் மட்டும் தான் காசு பணத்தை பார்க்க முடியும் என்று ஆக்ரோஷமாக கூறியிருக்கிறார்.

ஒருவேளை இதனால் தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தொழிலதிபருக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தை இருந்தாலும் வாழ்க்கை முழுவதும் செட்டில் ஆகுவதற்காக நிக்கோலாய் திருமணம் பண்ண முடிவெடுத்து இருக்கிறார் போல. ஏற்கனவே வரலட்சுமி பெயரில் மும்பையில் ஒரு வீட்டை வாங்கி கொடுத்து விட்டார். இதனை தொடர்ந்து இன்னும் அவர் மூலம் பணம் மழையில் நனைய போகிறார்.

Trending News