வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

மாஸ் ஹீரோவாக இருக்கும் விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஹீரோயின்களுக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் நடிகர்களுக்கும் கூட இருக்கிறது. அப்படி ஒரு ஆசையில் அவரின் ஒரு படத்தில் இணைந்து நடித்த வாரிசு நடிகர் ஒருவருக்கு இறுதியில் ஏமாற்றம் தான் கிடைத்திருக்கிறது.

அதாவது பாக்யராஜின் மகன் சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே மாஸ்டர் படத்தில் நடிக்க கேட்ட போது அவர் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார். இதன் மூலம் அவர் தனக்கு சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்கும் என்றும் நம்பி இருந்தார். ஆனால் அவருடைய ஆசை நிறைவேறவில்லை. ஏனென்றால் அந்தப் படத்தில் அவருடைய காட்சிகள் வெறும் 10 நிமிடங்கள் வருவது போன்று தான் காட்டப்பட்டிருக்கும்.

Also read: அரசியல் என்ட்ரிக்கு போடும் அச்சாரம்.. லோகேஷுக்கு கண்டிஷன் போட்ட விஜய்

ஆனால் அதற்காக அவர் முப்பது நாட்கள் வரை தேதிகளை ஒதுக்கி கொடுத்திருந்தது தான் பரிதாபம். அதாவது விஜய்யுடன் நடிக்கப் போகிறோம் என்ற குஷியிலும் அதன் மூலம் முன்னேறி விடலாம் என்ற ஆர்வத்திலும் அவர் லோகேஷ் கேட்ட தேதிகளை வாரி வழங்கியிருக்கிறார். ஆனால் படத்தில் அவருடைய காட்சிகள் மிகக் குறைந்த அளவில் காட்டப்பட்டிருந்தது அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்திருக்கிறது.

இருந்தாலும் அவர் அது குறித்து லோகேஷிடம் எதையும் கேட்கவில்லையாம். ஏனென்றால் டைரக்டர் எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்று அவர் நினைத்திருக்கிறார். தன்னுடைய முயற்சிகள் பலனளிக்காமல் போய்விட்டதே என்ற வருத்தம் இருந்தாலும் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாராம்.

Also read: விஜய்யை பின்னுக்கு தள்ளிய கடைசி 3 படங்கள்.. வினோத்தால் எகிறிய அஜித்தின் மார்க்கெட்

மாஸ்டர் படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்த அவர் இப்போதும் தன் திறமையை நிரூபிக்கும் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். என்னதான் அவருடைய அப்பா மிகப்பெரிய செலிபிரிட்டியாக இருந்தாலும் இவர் இன்னும் தனக்கான இடத்தை பிடிக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

இத்தனைக்கும் நடிப்பு, டான்ஸ் என்று அனைத்து திறமைகளும் அவருக்கு இருக்கிறது. ஆனால் வாய்ப்புகள் தான் கிடைத்த பாடில்லை. அந்த வகையில் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் ராவணக்கோட்டம் திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய் த்ரிஷா இணைந்து நடித்த 5 படங்கள்.. 20 வருடங்களாக தொடரும் கெமிஸ்ட்ரி

Trending News