பொங்கல் ட்ரீட்டாக விஜய்யின் வாரிசு படம் ரிலீஸ் ஆகி அதிகாலை 4 மணி முதல் ஏகப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல முன்னணி தியேட்டர்களில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை டிக்கெட் ஃபுல் ஆனதால் ரசிகர்கள் பலரும் டிக்கெட்டை வாங்க வரிசை கட்டி காத்திருக்கின்றனர்.
இவ்வளவு நாள் மாஸ் ஹீரோவாக பார்த்த விஜய்யை செண்டிமெண்ட் நாயகனாக பார்ப்பதற்கு வாரிசு படம் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமே கொண்டாடும் அளவுக்கு படத்தில் ஆக்சன், காதல், காமெடி, செண்டிமெண்ட் என அனைத்து மசாலாக்களும் அளவோடு தூவப்பட்டிருக்கும் வாரிசு படத்தை குறித்த பாசிட்டிவ் விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் குவிந்து கொண்டிருக்கிறது.
Also Read: பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஒன் மேன் ஷோ.. வாரிசு அனல் பறக்கும் ட்விட்டர் ரிவ்யூ
இந்நிலையில் உலக அளவில் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் நேற்று வரை நடைபெற்ற பிரீ சேல் டிக்கெட் புக்கிங்-இல் வாரிசு அதிகபட்சமாக ரூபாய் 8.45 கோடியை தட்டி தூக்கியது.
இதனால் இன்று பல லட்ச ரசிகர்கள் படத்தை பார்க்க உள்ளதால் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடியை முதல் நாள் வசூலாக வாரிசு குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் உலக அளவில் 35 கோடியை பாக்ஸ் ஆபீஸில் குவிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: அதிகாலை காட்சிக்கு தடை.. சண்டையால் வாரிசு, துணிவு படத்திற்கு அதிரடி உத்தரவிட்ட அரசு
அதுமட்டுமின்றி வாரிசு திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், எதிர்பார்த்ததை விட வசூல் அதிகமாகவே இருக்கும் என்றும் கணித்திருக்கின்றனர். இவ்வாறு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருக்கும் தல தளபதியின் வாரிசு மற்றும் துணிவு போன்ற இரண்டு படங்களையும் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
ஆகையால் படத்தில் இருக்கும் குறைகளை தாண்டி ரசிகர்கள் இந்த இரண்டு படங்களையும் திரையரங்குகளில் பார்த்து பொங்கலை கொண்டாடப் போகின்றனர். அதிலும் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் ஒன் என்ற விஜய்யின் பெயரை வாரிசு காப்பாற்றி விடுமா என்பதும் இன்றைய நாள் முடிவில் தெரிந்து விடும்.
Also Read: விஜய் வச்சு டி-20 ஆடாமல், டெஸ்ட் மேட்ச் ஆடிட்டாங்க! வாரிசு படம் ஓக்கேவா.? திரை விமர்சனம்