விஜய்யின் வாரிசு படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் உருவான நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தெலுங்கு சினிமாவை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்தார்.
ஏற்கனவே தில் ராஜு ஒரு பேட்டியில் தேவையில்லாமல் வாயை கொடுத்த வாங்கி கட்டிக் கொண்டார். அதாவது தமிழ் சினிமாவில் அஜித்தை காட்டிலும் விஜய்க்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர்தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். ஆகையால் உதயநிதி வாரிசுக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Also Read : முதல் நாள் புக்கிங் வசூல் விவரம்.. துணிவுடன் சொன்ன கணிப்பை தவுடு பொடியாக்கியதா வாரிசு.?
இந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில் தற்போது வாரிசு படம் தமிழில் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு தெலுங்கில் படம் வெளியாகுவதற்கான காரணத்தை தில் ராஜு கூறியுள்ளார்.
அதாவது ஏற்கனவே தெலுங்கில் வாரிசு படம் வெளியாவதற்கு மிகப்பெரிய பிரச்சனை எழுந்தது. பொதுவாக தெலுங்கு சினிமாவில் பண்டிகை காரணங்களில் அங்குள்ள பெரிய நடிகர்களின் படங்கள் தான் வெளியாகும். ஆகையால் தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ள வாரிசு படம் தெலுங்கில் வெளியிட அங்குள்ள தயாரிப்பு சங்கம் தடை விதித்தது.
Also Read : வாரிசு படத்தால் படாத பாடுபடும் விஜய்.. தமனால் வந்த அடுத்த பிரச்சனை
அதன் பின்பு ஒரு வழியாக இப்போது ஜனவரி 14 வாரிசுடு படம் வெளியாவது உறுதியாகி உள்ள நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா படங்கள் ஜனவரி 11ஆம் தேதியே வெளியாகுவதால் வாரிசு படம் அந்த நடிகர்களுக்கு போட்டியாக இருக்காது என்ற தில் ராஜு கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் உள்ளவர்கள் ஒரு குடும்பம் போல பழகி வருகிறோம். ஆகையால் அந்தப் படங்கள் வெளியான பிறகு வாரிசு படத்தை வெளியிட முடிவு செய்தோம் என்ற தில் ராஜு உண்மையை உளறி உள்ளார். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் தெலுங்கு ஹீரோக்களால் விஜய் ஓரம் கட்டப்பட்டுள்ளார் என்று கலாய்த்து வருகிறார்கள்.
Also Read : முன்கூட்டியே சுதாரித்துக் கொண்ட முதலாளிகள்.. துணிவு ரிலீஸ் பார்த்து, அடிக்கு மேல் அடி வாங்கும் வாரிசு