விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் உலகெங்கும் உள்ள பல திரையரங்களில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் குடும்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை. இந்தப் படம் ரசிகர்களுக்கு இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் இந்த படத்திற்கு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் துணிவு படத்தை விட 90 கோடி வசூலில் அதிகமாக உள்ளது. இதற்கான தகவல்கள் இப்பொழுது வெளியாகி வந்துள்ளது.
விஜய் ரசிகர்களிடம் வாரிசு திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதை வெளி விடுவதற்கான திரையரங்குகள் குறைவாகவே தமிழ்நாட்டில் கிடைத்தது. இருப்பினும் வாரிசு படம் வசூல் ரீதியாக அதிகளவில் கலெக்ஷனை பார்த்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த படத்திற்கு 125.25 கோடி வசூல் ஆகியுள்ளது.
Also read: தளபதி 67-ல் விஜய்க்கு முக்கியத்துவம் இல்லையாம்.. லோகேஷ் போட்டிருக்கும் ஸ்கெட்ச்
பொங்கலை ஒட்டி ஆந்திராவில் மிகப்பெரிய நடிகர்களான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி படங்கள் வெளியாகின. அதனால் வாரிசு படத்தை ரிலீஸ் செய்வதற்கு பிரச்சனை ஏற்பட்டு வந்தது. அதையும் தாண்டி வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. இதற்கான வசூல் ஆந்திராவில் 25.80 கோடி,கர்நாடகாவில் 13.90 கோடி வசூல் புரிந்து வருகிறது.
பொதுவாகவே விஜய் படம் என்றாலே கேரளாவில் உள்ள ரசிகர்களுக்கு ஒரு வெற்றி படமாக பார்க்கப்பட்டு வருவார்கள். அதிலும் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வாரிசு படம் அங்கே பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது. கேரளாவில் வாரிசு படத்திற்கான 11.63 கோடி வசூல் ஆகியுள்ளது.
Also read: டான்ஸ், சிக்ஸ் பேக் என ஏற்றியும் பிரயோஜனம் இல்ல.. விஜய்க்கு வில்லன் ஆகியும் கண்டுக்காத சினிமா
மேலும் வாரிசு திரைப்படம் இந்தியாவின் மற்ற இடங்களிலும் அதிக அளவில் வசூலில் சாதனை பார்த்து வருகிறது. இதற்கான வசூல் கலெக்ஷன் மற்ற இடங்களில் மொத்தம் 13.55 கோடி வசூல் ஆகி உள்ளது. வெளிநாடுகளில் இந்த படம் 80.75 கோடி கலெக்ஷன் கிடைத்துள்ளது.
இந்தப் படம் ரிலீஸ் ஆகி 14 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் மொத்தமாக இந்த படத்தின் வசூல் 270.88 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் கிடைத்துள்ளது. மேலும் இந்த குடியரசு தின வார இறுதியில் குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த வார இறுதியின் வசூல் ஆனது 300 கோடி மேல் இருக்கும் என்று கணித்துள்ளனர்.