திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

250 கோடி, 300 கோடி கதையெல்லாம் சும்மாவா.. உள்ளூரில் வியாபாரம் ஆகாத தளபதியின் வாரிசு

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் பில்டப் கொஞ்சம் ஓவராகவே இருக்கும். படக்குழு ஒருபக்கம், அந்த நடிகர்களின் ரசிகர்கள் ஒருபக்கம், கூட நடித்த நடிகர்கள் ஒரு பக்கம் என படம் ரிலீஸ் ஆகும் வரை மாற்றி, மாற்றி பில்டப் கொடுத்து தீர்த்துவிடுவார்கள். இந்த ஓவர் ஆட்டத்தினாலேயே மொக்கை படங்கள் கூட டிக்கெட் புக்கிங்கிலேயே பாதி காசை அள்ளிவிடும்.

சினிமா முன்பை போல் இல்லாமல் இப்போது எதற்கெடுத்தாலும் ஓவர் ஹைப் தான். மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர், ட்ரைலர், டீசர், சாங் ப்ரோமோ, லிரிக்கல் வீடியோ, ஸ்னீக் பீக் என ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆவதற்குள் அப்டேட், எக்ஸ்க்ளூசிவ் என ரசிகர்கள் அந்த படத்தை மறந்துவிடாத அளவிற்கு பில்டப் மேல் பில்டப் வந்து கொண்டே இருக்கும்.

Also Read: ஒரே ஒரு படம் சக்ஸஸ், அந்த செல்லத்த தூக்கிட்டு வாங்க என கூறிய தளபதி.. கதை கேட்டு என்ன சொன்னார் தெரியுமா?

இப்படி சமீபத்தில் ஓவர் அலப்பறையை கூட்டி கொண்டிருக்கும் படம் என்றால் தளபதி விஜயின் வாரிசு தான். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகும் வாரிசு படம் ஆரம்பித்ததில் இருந்தே ஏகப்பட்ட அப்டேட்ஸ் தான். படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என கடந்த தீபாவளியன்று அப்டேட் வந்ததில் இருந்தே படத்தின் வியாபாரம் பற்றி பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஓடிடி உரிமம் இத்தனை கோடி, சேட்டிலைட் உரிமம் அத்தனை கோடி, 250 கோடிக்கு வியாபாரம், 300 கோடிக்கு வியாபாரம், ரெகார்ட் பிரேக்கிங் வியாபாரம் என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. ஓவர்சீஸ் நாடுகளில் கோடிக்கணக்கில் வியாபாரம் ஆனதாக சொல்லப்படும் வாரிசு படத்தை உள்ளூரிலேயே இன்னும் யாரும் வாங்கவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

Also Read: விஜய்யுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்ட பிரபலம்.. நாசுக்காக ரிஜெக்ட் செய்த தளபதி

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய தியேட்டர் உரிமையாளர் ஒருவர் இந்த உண்மையை வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் வாரிசு படத்தை இதுவரையிலும் எந்த விநியோகஸ்தர்கள் வாங்கியிருக்கிறார்கள் என தியேட்டர் உரிமையாளர்களுக்கே தெரியவில்லை. அப்படி பார்த்தால் வாரிசு படத்தை செங்கல்பட்டில் இன்னும் யாரும் வாங்கவே இல்லை.

கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுப்பவர்கள் எப்படியாவது போட்ட பணத்தை எடுத்துவிட வேண்டும் என்று செய்யும் ஸ்டண்ட் வேலைகள் தான் இதெல்லாம். சில நேரங்களில் அந்தந்த நடிகர்களின் ரசிகர்களே யாருக்கு தெரிய போகிறது என்ற எண்ணத்தில் இதுபோன்ற பில்டப்புகளை கொடுத்து இப்படி மாட்டிக் கொள்கிறார்கள்.

Also Read: தமிழ் படங்களை அலறவிட்ட 5 கன்னட படங்கள்.. தளபதியை டீலில் விட்ட அந்த படம்

Trending News