திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தீபாவளியன்று சரவெடியாய் வெளிவந்த வாரிசு போஸ்டர்.. சம்பவம் செய்யும் தளபதி

நெல்சனின் பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை வம்சி இயக்கி வருகிறார். மேலும் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு படத்தின் மூலம் முதல்முறையாக விஜய்க்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த தீபாவளி அன்று வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஏற்கனவே இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் விஜயின் பிறந்தநாள் அன்று வெளியானது.

Also Read :கம்மென்றும் உம்மென்றும் மாறிய வாரிசு படக்குழு.. சொந்தக்குரலில் பாடிய பாடலுக்காக விஜய் விட்ட டோஸ்

இப்போது வெளியாகி இருக்கும் போஸ்டரில் விஜய் கருப்பு நிற உடையில் கையில் சுத்தியலுடன் அதிரடியாக இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. செண்டிமெண்ட் நிறைந்த இப்படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

மேலும் வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகும் என்பதை உறுதிப்பட இந்த போஸ்டர் தெளிவுபடுத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகவில்லையே என்ற கவலையில் இருந்தனர். ஆனால் அதைப் போக்கும் விதமாக வாரிசு போஸ்டர் வெளியாகியுள்ளது.

Also Read :கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. விஜய்க்காக எதையும் எதிர்பார்க்காமல் காப்பாற்றிவிட்ட மூத்த நடிகர்

இந்த புதிய வாரிசு படத்தின் போஸ்டர்களை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். ஆகையால் வாரிசு போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உள்ளது .மேலும் வாரிசு படத்தின் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.

varisu-new-poster

Also Read :விஜய்யின் கேரியரை உயர்த்திய விக்ரமன்.. கிளைமாக்ஸை மாற்றியதால் படம் ஹாட்ரிக்

Trending News