வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

ஒவ்வொரு பாடலும் வேற லெவல்.. இணையதளத்தை திணறடிக்கும் வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதுவரை விஜய் படங்களுக்கு நடந்த இசை வெளியீட்டு விழாவிலேயே இதுதான் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு ரசிகர்களின் ஆரவாரத்தால் இந்த நிகழ்ச்சி திருவிழா போல் களை கட்டியது.

இந்த நிகழ்ச்சியில் விஜய் உடன் இணைந்திய ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், தில் ராஜு, வம்சி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அது மட்டுமல்லாமல் விஜய்யின் அம்மா, அப்பா உட்பட ஏராளமான பிரபலங்கள் வந்திருந்து இந்த நிகழ்ச்சியை மேலும் சிறப்படைய வைத்தனர். இவ்வாறு யாரும் எதிர்பார்க்காத பல சுவாரஸ்ய சம்பவங்களுடன் வாரிசு பாடல்களும் வெளியிடப்பட்டது.

Also read: இப்ப அஜித் இல்ல, ரஜினி ரசிகர்களை சீண்டி விட்ட தயாரிப்பாளர்.. வாரிசு மேடையில் வேண்டாத பேச்சு

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, அம்மா சென்டிமென்ட் சாங் உட்பட மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து இப்போது அடுத்ததாக இரண்டு பாடல்களும் வெளியாகி உள்ளது. அதில் அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடிய ஜிமிக்கி பொண்ணு பாட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அதை தொடர்ந்து சங்கர் மகாதேவன் குரலில் வா தலைவா பாடலும் அட்டகாசமாக இருக்கிறது. இவ்வாறு வாரிசு படத்தில் இடம்பெற்றிருக்கும் அத்தனை பாடல்களும் மெர்சல் ஆக இருக்கிறது. அந்த வகையில் நேற்று வெளியான பாடல்கள் இணையதளத்தையே தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறது.

Also read: அந்த ஒரு விஷயத்தில் தான் ஜாதி கிடையாது.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு

இது படத்தின் மீதான ஆர்வத்தையும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே படம் குறித்து வெளிவந்த ஒவ்வொரு அப்டேட்டும் அனைவரின் ஆவலையும் தூண்டி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு திரைப்படமும் அதே நாளில் வெளியாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இரு தரப்பு ரசிகர்களும் உச்சகட்ட பதட்டத்துடன் காத்திருக்கின்றனர். அதை அதிகரிக்கும் வகையில் தற்போது வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லரும் விரைவில் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் வரும் பொங்கல் திருநாள் விஜய் ரசிகர்களுக்கு தளபதி பொங்கலாக மாற இருக்கிறது.

Also read: முழு எனர்ஜியுடன் வந்த விஜய்.. இனிமே இப்படித்தானாம், புது ஸ்டைலில் மேடையில் நடந்த சுவாரஸ்யம்

Trending News