செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வேகமெடுக்கும் பொங்கல் ரேஸ்.. வாரிசு, துணிவு ப்ரீ பிசினஸ் இன்றைய நிலவரம்

பொங்கல் திருநாள் வருவதற்கு இன்னும் சில தினங்கள் இருந்தாலும் ஜனவரி 11 தான் ஒரிஜினல் பொங்கல் என்று சொல்லும் அளவுக்கு இப்போது திரையுலகம் பரபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் துணிவு, வாரிசு படங்களை பார்ப்பதற்காக விஜய், அஜித் ரசிகர்கள் மாத கணக்கில் காத்திருக்கின்றனர். தற்போது அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நாளும் இதோ அதோ என்று நெருங்கி விட்டது.

ஆனாலும் இந்த இரு படங்களுக்கு இருக்கும் உச்சகட்ட மோதல் மட்டும் இன்னும் கொஞ்சம் கூட குறையவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இந்த படங்கள் பற்றி வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டும் சுவாரசியத்தை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது. அதிலும் இந்த படங்களின் ப்ரீ பிசினஸ் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது.

Also read: பொங்கல் டிஆர்பி-காக அடித்துக்கொள்ளும் 5 சேனல்கள்.. டிவியில் ஒளிபரப்பாக உள்ள மொத்த படங்களின் லிஸ்ட்

அந்த வகையில் இன்றைய நிலவரப்படி துணிவை வாரிசு ஓவர் டேக் செய்துள்ளது. அதாவது துணிவு திரைப்படத்தின் பிரீ பிசினஸ் 6. 97 கோடியாக இருக்கிறது. அதேபோன்று வாரிசு படத்தின் பிரீ பிசினஸ் 7.02 கோடி வசூலித்திருக்கிறது. இது இன்றைய நிலவரத்தை பொருத்த கணக்கீடு தான்.

இந்த இரண்டு படங்களும் நாளை மறுநாள் தான் வெளியாக இருப்பதால் இதில் சில மாறுதல்கள் ஏற்படவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தற்போதைய நிலவர படி அஜித்தை பின்னுக்கு தள்ளி விஜய் தான் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். இதை பார்க்கும் போது இந்த பொங்கல் ரேஸ் இப்போதே பயங்கர வேகம் எடுத்திருப்பதாகவே தெரிகிறது.

Also read: ரேஸ்ல ஃபர்ஸ்ட் போறது முக்கியம் இல்ல, ஜெயிக்கணும்.. வாரிசை பற்றி விஜய்யின் கணிப்பு

மேலும் இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே மிக பெரும் பரபரப்பு அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மீடியாக்களும் இந்த படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்னவாக இருக்கும் என்பதை தான் இப்போது ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

அதற்கேற்றார் போல் எப்போதுமே அதிகாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்படும் முதல் காட்சி இந்த முறை நள்ளிரவிலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இந்த பரபரப்பை உச்சகட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது. மேலும் இப்போது துணிவு படத்தின் பிரிவியூ ஷோ விமர்சனங்களும் பாசிட்டிவாக வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பொங்கல் ரேஸில் எந்த குதிரை ஜெயிக்கும் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also read: ஒரே இயக்குனருடன் அடுத்தடுத்து கூட்டணி போடும் அஜித்.. உண்மையை போட்டு உடைத்த வினோத்

Trending News