திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ளார்கள். இவர்களது படங்கள் தனித்தனியாக வெளியானாலே ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பொங்கல் பண்டிகைக்கு இரு ரசிகர்களுக்கும் விருந்தளிக்கும் விதமாக விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் ஒரே நாளில் வெளியானது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படமும், அஜித்தின் துணிவு படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆகையால் வாரிசு மற்றும் துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை இரண்டு நடிகர்களுமே பூர்த்தி செய்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

Also Read : தெலுங்கிலும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போட்ட வாரிசுடு.. இமயம் போல் நின்ற வால்டர் வீரய்யா, வீரசிம்மரெட்டி

வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும், துணிவு படம் ஆக்சன் நிறைந்த படமாகவும் எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு விஜய், அஜித் படங்கள் இந்த பொங்கலுக்கு தான் மோதிக்கொண்டது. ஆனால் துணிவு மற்றும் வாரிசு இரண்டும் சும்மா டிரெய்லர் தான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அதாவது மீண்டும் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் சரவெடியாக வெளியாக உள்ளதாம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி மும்மரமாக நடந்து வருகிறது.

Also Read : 5 நாட்களில் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரிப்போர்ட்.. ஆட்ட நாயகனாக நிரூபித்த அஜித்

இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான் போன்ற பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது 62 ஆவது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை லைக்கா தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

ஏகே 62 படத்திற்காக ஹீரோயினை விக்னேஷ் சிவன் தேடி வருகிறாராம். இந்த சூழலில் வருகின்ற தீபாவளிக்கு விஜய்யின் தளபதி 67 மற்றும் அஜித்தின் ஏகே 62 படங்கள் மோதிக்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது வெளியான வாரிசு, துணிவை காட்டிலும் இந்த படங்கள் வேற லெவலில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : பாக்ஸ் ஆபிஸை திணறடித்த 5ம் நாள் மொத்த வசூல்.. தொடர் விடுமுறையில் அடித்து நொறுக்கும் வாரிசு

Trending News