சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

மோசமான விமர்சனத்தால் வீழ்த்தப்பட்ட வாரிசு.. விஜய்யின் மார்க்கெட்டை சரியா வைத்த வம்சி

விஜய் சமீபகாலமாக ஆக்சன் படங்களிலேயே நடித்து வந்ததால் மாறுதலுக்காக வாரிசு என்ற குடும்ப சென்டிமென்ட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். எப்போதுமே விஜய்யின் படங்கள் தனியாக வெளியாகி வசூலை வாரி குவித்து வந்தது.

ஆனால் இந்த வருடம் வாரிசு படத்திற்கு போட்டியாக அஜித்தின் துணிவு படமும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த இரு படங்களும் வெளியான சமயத்தில் வாரிசு படத்திற்கு இணையத்தில் மோசமான விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஆரம்பத்திலேயே வாரிசு படத்தின் வசூல் குறைய தொடங்கியது.

Also Read : தளபதி 67 இல் இணைந்த பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. ஒருவேளை விஜய்க்கு ரத்த சொந்தமா இருக்குமோ?

அதுமட்டுமின்றி இப்படம் அதிகமாக தெலுங்கு சாயலில் இருப்பதாகவும், சூரிய வம்சம் போன்ற பல படங்களின் கலப்படமாக இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தது. அதுவும் 3 மணி நேரம் படம் மிகவும் மெதுவாக செல்வதாக கூறப்படுகிறது. வம்சியை நம்பி விஜய் தனது மார்க்கெட்டை இழந்து உள்ளார் என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இப்போது துணிவு படத்திற்கு வரவேற்பு கிடைத்த வருவதால் வாரிசை காட்டிலும் இந்த படத்திற்கு தான் அதிக காட்சிகள் ஒதுக்கப்பட்ட உள்ளது. அதுமட்டுமின்றி காலையிலிருந்து வாரிசு டிசாஸ்டர் என்று ட்விட்டரில் ஹேஷ் டெக் டிரெண்ட்டாகி வருகிறது. அதாவது இப்போது சினமா விமர்சனத்தை பார்த்து விட்டு தான் ரசிகர்கள் படம் பார்க்கச் செல்கிறார்கள்.

Also Read : தில் ராஜ் மீது கோபத்தில் இருக்கும் விஜய்.. வாரிசு படத்தால் ஏற்பட்ட மனஸ்தாபம்

ஆரம்பத்தில் இருந்தே வாரிசு படத்தின் மோசமான விமர்சனத்தால் விஜய் வீழ்த்தப்பட்டு உள்ளார். முதல்முறையாக தெலுங்கு இயக்குனர், தயாரிப்பாளரை நம்பி இறங்கிய விஜய்க்கு பெருத்த அடி விழுந்துள்ளது. ஆகையால் போனது போகட்டும் இனி ஒவ்வொரு அடியையும் பார்த்த வைக்க வேண்டும் என விஜய் யோசித்து உள்ளாராம்.

அதனால் வாரிசு படத்தை மறந்துவிட்டு தற்போது முழு வீச்சாக லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். வலிமையில் விட்டதை துணிவு படத்தில் எப்படி அஜித் பிடித்தாரோ, அதேபோல் வாரிசு படத்தின் விமர்சனத்தை சரிகட்ட தளபதி 67 என்ற மாஸ் படத்துடன் விஜய் வருவார் என எதிர்பார்க்கலாம்.

Also Read : வாரிசு, துணிவு எல்லாம் சும்மா டிரெய்லர் தான்.. மீண்டும் மோதும் விஜய், அஜித்

Trending News