ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

சிவாஜியை கோபப்படுத்திய பி வாசு.. கதையைக் கேட்காமல் விரட்டி விட்ட சம்பவம்

இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமாக இருக்கும் பி வாசு கடைசியாக சிவலிங்கா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே இதன் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்ட பலர் அப்படத்தில் நடித்திருந்தனர். இப்படத்தால் சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஏகப்பட்ட லாபம் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் சந்திரமுகி 2 திரைப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிவாஜி பற்றிய ஒரு சுவாரசியமான சம்பவத்தை பி வாசு பகிர்ந்துள்ளார்.

Also read:சந்திரமுகி முதலில் எடுக்க இருந்த பிரபல இயக்குனர்.. பெருந்தன்மையால் பி வாசுக்கு போன வாய்ப்பு

அதாவது ஒருமுறை வாசு சிவாஜியிடம் கதை சொல்வதற்காக அவருடைய வீட்டிற்கு சென்றிருக்கிறார். அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவாஜி வாசுவையும் சாப்பிட சொல்லி கூறி இருக்கிறார். ஆனால் வாசு அதை மறுக்கவே பிறகு சிவாஜி விரைவாக சாப்பிட்டு விட்டு கதை கேட்க அமர்ந்திருக்கிறார்.

ஆனால் கதை கேட்கும் போது சிவாஜி டிவியை ஆன் செய்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டே கேட்டிருக்கிறார். ஒரு ஐந்து நிமிடம் கதையை சொன்ன வாசு பிறகு சொல்வதை நிறுத்தி இருக்கிறார். இதனால் சிவாஜி ஏன் கதையை நிறுத்தி விட்டாய் என்று கேட்டதற்கு நீங்கள் டிவியை நிறுத்தினால் தான் நான் கதை சொல்வேன். இல்லையென்றால் கான்சன்ட்ரேஷன் இருக்காது என்று தைரியமாக கூறியிருக்கிறார்.

Also read:சிவாஜியே பார்த்து பிரம்மித்து போன நடிகை.. 60, 70களின் நயன்தாரா இவர்தான்

இதனால் கடுப்பான சிவாஜி என்னிடமே கான்சன்ட்ரேஷன் பற்றி கூறுகிறாயா, என் நினைப்பு முழுவதும் நடிப்பிலும், என்னுடைய கேரக்டரிலும் தான் இருக்கும் என்று கோபமாக கூறி இங்கிருந்து செல் என்று கூறியிருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் வாசுவும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ என்று அந்த சம்பவத்தினால் வருத்தப்பட்டு கொண்டிருந்த வாசுவுக்கு சிவாஜி வீட்டில் இருந்து போன் வந்திருக்கிறது. இதனால் பயந்து கொண்டு அங்கு சென்ற வாசுவை பார்த்து பிரபு உங்களுக்கு தைரியம் அதிகம், பின்னாளில் நீங்கள் பெரிய ஆளாக வருவீர்கள் என்று சிவாஜி கூறியதாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் சிவாஜி ப்ரொடக்ஷனுக்காக கதை கூறும் படியும் அவர்கள் கூறியிருக்கின்றனர். அதன் பிறகு நிம்மதி அடைந்த வாசுவும் அவர்களுக்கு கதை கூறியிருக்கிறார். இப்படி இவர்கள் கூட்டணியில் மன்னன், சந்திரமுகி உள்ளிட்ட பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also read:சிவாஜி நடித்ததிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான ஒரே திரைப்படம்.. பல கோடிகளை குவித்து செய்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை!

Trending News