வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போகும் வாயாடி.. முத்துக்குமாருக்கு போட்டியாக நிற்கும் போட்டியாளர்

Vijay Tv: பிக் பாஸ் தொடங்கி ஆறு வாரம் ஆனதை ஒட்டி தற்போது வரை போட்டியாளர்கள் மந்தமாகவே விளையாடி வருகிறார்கள். விளையாட்டை விறுவிறுப்பாக கொண்டு போகணும் என்பதை தாண்டி அவர்களுடைய கோபத்தையும் வன்மத்தையும் ஒவ்வொரு நாளும் மற்ற போட்டியாளர்களிடம் காட்டி வருகிறார்கள். அதுவே இந்த சீசனுக்கு மிகப்பெரிய பிளாக் மார்காக அமைந்துவிட்டது.

ஆனாலும் பிக் பாஸின் குருநாதர் ஏதாவது நாரதர் வேலையை பார்த்து போட்டியாளர்களிடம் கலகத்தை மூட்டி சுவாரசியமான கன்டென்ட் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இருக்கு இல்லை என்பதற்கு ஏற்ப புரியாத புதிராக தான் போட்டியாளர்கள் விளையாடிக் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் பழைய போட்டியாளர்களை விட புதுப்போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிலும் ரியா மற்றும் மஞ்சரியின் பேச்சு பார்க்கும் பொழுது இவர்கள் ஓரளவுக்கு டாப் 5 க்கு வர வாய்ப்பு இருக்கிறது என தோன்றியது. ஆனால் தற்போது வந்த கணக்கெடுப்பின்படி இவர்கள் இருவரும் தான் கம்மியான ஓட்டுகளை சேகரித்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறப் போவது மற்ற போட்டியாளர்களை ரிவ்யூ செய்துட்டு வந்த ரியா தான்.

இவருக்கு அடுத்து இருக்கும் மஞ்சரி, ஸ்கூல் டாஸ்க்கில் முடிந்த அளவுக்கு ஏதோ பர்ஃபாமன்ஸ் பண்ணினதால் இந்த வாரம் தப்பித்து விட்டார். அதே மாதிரி சிவக்குமாறும் சில நடிப்புகளையும் மிமிக்கிரியும் பண்ணி என்டர்டைன்மென்ட் பண்ணுவதால் அவரும் ஓரளவுக்கு வெளியே ஓட்டு வாங்கி விட்டார். இதற்கு அடுத்தபடியாக எதற்கும் இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்று மொத்த போட்டியாளர்களும் சேர்ந்து முத்திரை குத்தின ராணவ் தான் தற்போது பெஸ்ட் என்று சொல்வதற்கு ஏற்ப ஸ்கூல் டாஸ்க் நல்ல விளையாடியிருக்கிறார்.

அந்த வகையில் ஓட்டு கணக்கெடுப்பில் அதிக ஓட்டுக்களை வாங்கி இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இப்படியே போனால் அடுத்தடுத்து வரும் நாட்களில் ராணவ் ஒட்டுமொத்த மக்களிடமும் பெயர் வாங்கி டைட்டில் வின்னர் ஆகிவிடுவார் போல. ஆனால் இப்பொழுது வரை முத்துக்குமார் தான் லைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் ராணவ் இருக்கிறார்.

Trending News