சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஆதவ் அர்ஜுனா தற்காலிக நீக்கம்.. நிரந்தரமா நீக்கினா விசிக-வில் என்ன நடக்கும் தெரியுமா?, திக்கி திணறும் திருமா

Aadhav Arjuna: மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் ஆகிவிட்டது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் நிலைமை.

அவரது அன்புக்குரிய மற்றும் கட்சியின் துணை பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜுனா இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து ஆறு மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என்று கடந்த இரண்டு தினங்களாக தமிழக அரசியலில் பரவலாக பேசப்பட்டது.

நிரந்தரமா நீக்கினா விசிக-வில் என்ன நடக்கும் தெரியுமா?

இதற்கு காரணம் அம்பேத்கர் எல்லாருக்கும் ஆன தலைவர் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் திமுக குறித்து ஆதவ் அர்ஜுனா சர்ச்சையாக பேசிய கருத்துகள்தான்.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு ஆதவ் அர்ஜுனா நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேரவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எதற்காக ஆதவ் அர்ஜுனாவை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கினார், ஒரு வேளை அவரை நிரந்தரமாக நீக்கினால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கலாம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓரளவுக்கு மக்களிடையே அங்கீகாரம் பெற்றது திமுக கூட்டணியில் இணைந்த பிறகு தான். கட்சியிலிருந்து எம்பிக்கள் பாராளுமன்றம் வரை சென்றது இந்த கூட்டணியில் தான்.

அப்படி இருக்கும்போது இந்த கூட்டணியில் தொடரத்தான் திருமாவளவன் விரும்புகிறார். ஆனால் அந்த கூட்டணியை பற்றி கட்சியின் முக்கிய தலைவர் பேசியிருப்பது திருமாவளவனுக்கு பேர அதிர்ச்சி தான்.

இது குறித்து பிரபல பத்திரிகையாளர் மணி தன்னுடைய பேட்டியில் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கினால் அவர் அதைத் தொடர்ந்து எப்படிப்பட்ட பிரச்சாரத்தை கையில் எடுப்பார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நம் தலைவரின் உரிமைக்காக தான் நான் போராடினேன். ஆட்சி அதிகாரத்தில் நமக்கும் பங்கு வேண்டும் என்பதை தான் நான் எடுத்துரைத்தேன்.

அதனால் அந்த கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டேன் என அவர் பேசினால் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுக கட்சிக்கு அடங்கிப் போய் இருக்கிறது என்பது போன்ற மாய பிம்பம் வந்துவிடும். இதனால் தேர்தலின் போது தொண்டர்கள் இந்த கட்சிக்குள் ஜெல் ஆகி வரமாட்டார்கள்.

அதிலும் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விட்டால் அது விஜய்க்கு பெரிய பிளஸ் ஆக அமைந்து விடும்.

இது மட்டும் இல்லாமல் நேற்று இரவே சவுக்கு சங்கர் ஆதவ் அர்ஜுனா கட்சியிலிருந்து நீக்கப்பட போகிறார் என ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே திருமாவளவன் முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்திக்க சென்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News