ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

கயலுக்கு எதிராக நிற்கும் வேதவல்லி.. கொடுத்த வாக்கை காப்பாற்ற அன்பு ஷாலினியை சேர்த்து வைக்கப் போகும் எழில்

Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் கல்யாணத்துக்கு பிறகாவது நிம்மதியாகவும் சந்தோசமாகவும் எழிலுடன் வாழ்க்கையை நடத்துவார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு முழுக்க முழுக்க ஏமாற்றம்தான். கல்யாணத்துக்கு பிறகு அப்பா மீது விழுந்த பழியை போக்க வேண்டும் என்று கிராமத்திற்கு போய் தேவையில்லாத பல பிரச்சினைகளில் மாட்டிக் கொண்டார்.

இன்னொரு பக்கம் தனக்கு பிடிக்காத கல்யாணத்தை எழில் செய்து விட்டார் என்ற கோபத்தில் சிவசங்கரி, கயல் மீது மொத்த கோபத்தையும் காட்டும் விதமாக தொடர்ந்து பிரச்சனைகளை கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் வேலு, கயல் மீது இருக்கும் ஆசையால் எழில் இடமிருந்து கயலை பிரித்துக் காட்டுவேன் என்று சுத்தி வருகிறார்.

இதெல்லாம் போதாது என்று வேதவல்லி புதுசாக ஒரு ரூட்டை பிடித்திருக்கிறார். அதாவது கயில் குடும்பத்தையும் கயிலையும் நல்லா புரிந்து கொண்டு நான் செய்த தவறுகள் எல்லாம் மன்னித்துவிடு என திருந்திய வேதவல்லி மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறது என்பதற்கு ஏற்ப கயிலின் அம்மாவிடமும், கயிலிடமும் கொஞ்சம் கரராக நடந்து கொள்கிறார்.

அதாவது ஷாலினிக்கு வேறு ஒரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வரும் விஷயத்தை தெரிந்து கொண்ட கயல், தம்பி அன்புக்காக வேதவல்லி இடம் பேச வருகிறார். ஆனால் வேதவல்லி என்ன ஆனாலும் என் மகள் ஷாலினி அன்புக்கு கொடுக்க மாட்டேன் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார். இன்னொரு பக்கம் அன்பு மற்றும் ஷாலினி காதலை புரிந்து கொண்ட கயல், ஷாலினிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும்.

அதே நேரத்தில் வேதவள்ளியும் கஷ்டப்படுத்தாமல் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று கயல் ரெண்டு கிட்ட சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார். இந்த சமயத்தில் கயல் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் விதமாக எழில், ஷாலினி மற்றும் அன்புவின் காதலை ஒன்று சேர்க்கும் விதமாக இருவருக்கும் கல்யாணத்தை நடத்தி வைக்க போகிறார்.

Trending News