Kayal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற கயல் சீரியலில், கயல் நிச்சயதார்த்தத்தில் கலகத்தை ஏற்படுத்தி எப்படியாவது நிச்சயதார்த்தத்தை நிறுத்தி விட வேண்டும் என்று கயலின் பெரியப்பா மற்றும் வடிவு பல சதிகளை செய்து வந்தார்கள். ஆனால் கயல் அதையெல்லாம் முறியடித்து எப்படியாவது அம்மா ஆசைப்பட்ட மாதிரி நிச்சயதார்த்தம் நடக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.
இதற்கிடையில் வேதவல்லி, தன் மகள் ஷாலினி அன்புவை காதலிப்பதை தெரிந்து கொண்டு எப்படியாவது இவர்களை பிரிக்க வேண்டும் என்று நினைத்தார். அந்த வகையில் ஷாலினியிடம் என்ன சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாக அன்புவிடம் பேசிட்டு வந்ததால் அன்புவை இல்லாமல் ஆக்கி விட வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அதனால் நடக்கிற கயல் நிச்சயதார்த்தத்தில் அன்புக்கு மறைமுகமாக ஜூஸில் விஷத்தை வைத்து கொடுத்தார். ஆனால் இது தெரியாத கயலின் அம்மா அந்த ஜூசை குடித்து வாயிலிருந்து ரத்தம் வரும் அளவிற்கு உயிருக்கு போராடும் நிலைமைக்கு போய்விட்டார். இதனால் தன்னுடைய உயிருக்கு ஒரு ஆபத்து என்பதை கயல் அம்மா புரிந்து கொண்டு கயிலுக்கு எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.
வேதவல்லி பற்றி தெரிந்து கொண்ட கயல்
ஆனால் அது எதுவும் நடக்காமல் கயல் மற்றும் எழில் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. கயல் நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் கயிலின் அம்மா மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார். உடனே அங்கே இருந்த அனைவரும் பதட்டம் அடைந்து கயில் அம்மாவை மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்து விட்டார்கள். அங்கே சிகிச்சை பெற்று வரும் கயலின் அம்மாவுக்கு எதுவும் ஆகாதபடி நல்லபடியாக குணமாகி விடுவார்.
இதனை தொடர்ந்து அம்மா இந்த நிலைமைக்கு காரணம் என்ன என்பதை கயல் தெரிந்து கொள்ள நினைக்கிறார். அப்பொழுது கயல் என்னுடைய நிச்சயதார்த்தம் நடக்க கூடாது. அதை நிறுத்துவதற்கு யாருடைய உயிர் போக வேண்டும் என்று நினைத்த யாரோ ஒருவர் இந்த காரியத்தை செய்திருக்கிறார் என்று கயல் சொல்கிறார்.
உடனே ஷாலினி அம்மா வேதவல்லி தன் மீது எந்தவித பழியும் வந்து விடக்கூடாது என்பதற்காக கயல் பெரியப்பா மீது தான் தவறு இருக்கிறது என்பது போல் பதட்டத்தில் பேசுகிறார். இதனை பார்த்த கயலுக்கு, வேதவல்லி மீது சந்தேகம் வந்துவிட்டது.
இதற்கு இடையில் ஷாலினி, கயல் அம்மா வாயிலிருந்து ரத்தம் வருவது எனக்கு முன்னாடியே தெரியும். ஆனால் சொல்லக்கூடாது என்று அவர்கள் சத்தியம் வாங்கி விட்டார்கள். இருந்தபோதிலும் சத்தியத்தை மீறி சொல்ல வரும்பொழுது என்னை சொல்ல விடாமல் எங்க அம்மா தடுத்து விட்டார் என்று ஷாலினி கூறிவிட்டார்.
இதனால் கயலுக்கு ஒட்டுமொத்த சந்தேகமும் வேதவல்லி மீது வந்து விட்டது. இதனை சொல்லிய பொழுது தேவியின் வீட்டுக்காரர் எங்க அம்மா ஏன் விஷம் வைக்கணும் என்று கோபத்துடன் கேட்கிறார். அதற்கு கயல் நிச்சயதார்த்தம் நடக்கும் பொழுது எனக்கு சில விஷயங்கள் தெரியவந்தது. அதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது உங்கம்மா தான் இதற்கு காரணமாக இருப்பார்கள் என்று கயல் உறுதியாக சொல்கிறார்.
இதனை தொடர்ந்து இனி விசாரிக்கும் ஒவ்வொரு விஷயங்களிலும் ஷாலினி அம்மா வேதவல்லி மாட்டிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எது எப்படியோ கயல் அம்மாவுக்கு எதுவும் ஆகாத நிலையில் அடுத்து கயல் மற்றும் எழில் நிச்சயதார்த்தம் அடுத்த கட்ட வேலைகளாக நடக்க போகிறது.
கயல் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Kayal: பெரியப்பாவோட கூட்டு சேர வில்லி அத்தை வந்தாச்சு
- ஒரே மேடையில் கயலுக்கும் தங்கைக்கும் கல்யாணம்
- கயல் நிச்சயதார்த்தத்தை கல்யாண மேடையாக மாற்றப் போகும் காமாட்சி