சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தன்வி-க்காக வேதா எடுக்கப் போகும் முடிவு.. விக்ரம் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகி போச்சு

Modhalum Kadhalum Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மோதலும் காதலும் சீரியலில், வேதாவின் ட்ரீட்மென்ட்காக விக்ரம் உயிரை பணயம் வைத்து மருந்து செடியை எடுத்துட்டு வந்து அத்தையிடம் கொடுத்து விட்டார். ஆனால் காலில் பாம்பு கொத்தியதால் இரவு முழுவதும் விக்ரமை தூங்க விடாமல் வேதா கண்விழித்து வைத்தியம் பார்த்து காப்பாற்றி விடுகிறார்.

அடுத்த நாள் வேதாவின் ட்ரீட்மென்ட் நல்லபடியாக முடிந்து விட்டது என்று அத்தை சொல்லியதும் வேதா மற்றும் விக்ரம் ஊருக்கு கிளம்ப தயாராகி விட்டார்கள். இதற்கிடையில் அந்த மருத்துவமனையை காலி பண்ண சொல்லி அரசாங்கம் உத்தரவுடன் வந்திருந்தார்கள்.

ஆனால் விக்ரம் இந்த இடத்தை நானே வாங்கி தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறேன் என்று சொல்லி மொத்தத்தையும் அத்தைக்காக வாங்கி கொடுத்து விடுகிறார். பிறகு ஊருக்கு கிளம்பும் பொழுது வேதா அங்கே இருக்கும் கோவிலுக்கு போய் விக்ரமை பற்றி பேசிக்கொள்கிறார்.

குழப்பத்தில் இருக்கும் வேதா

அதாவது விக்ரம், தன்விக்காக மட்டும்தான் என்னை கல்யாணம் பண்ணினார். அவருக்கு என்னை கண்டால் பிடிக்காது. இன்னும் சொல்ல போனால் இந்த மருத்துவமனைக்கு வரமாட்டேன். இந்த ட்ரீட்மென்ட் எல்லாம் தேவையில்லை என்று ஆரம்பத்தில் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் தற்போது என்னுடைய ட்ரீட்மெண்டுக்காக உயிரை பணயம் வைத்து என்னுடைய குறையை நீக்கிவிட்டார். இவருக்கு உண்மையிலேயே என் மேல் காதல் வந்து விட்டதா என்ற குழப்பத்தில் வேதா புலம்புகிறார். அப்பொழுது மனசாட்சி படி வேதா வந்து விக்ரமுக்கு உன் மேல் காதல் வந்து விட்டது. அதனால் வீட்டுக்கு போனதும் உன்னுடைய காதலை விக்ரம் இடம் சொல்லி விடு என்று கூறுகிறது.

அதன்படி வீட்டுக்கு போனதும் காதலை சொல்லி ஒரு புது உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று வேதா முடிவு எடுத்து விட்டார். ஆனால் தன்வி-யை பார்த்ததும் நமக்கு ஒரு குழந்தை பிறந்து விட்டால் எங்கே தன்வி மேல் இருக்கும் பாசம் குறைந்து விடுமோ என்ற பயத்தில் விக்ரமிடமிருந்து விலக ஆரம்பிக்கிறார்.

ஆனால் இது எதுவும் தெரியாத விக்ரம், வேதா பண்ணுகிற விஷயம் புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். இந்த ட்ரீட்மெண்டுக்கு இரண்டு பேரும் போனதற்கு காரணமே இவர்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதனால் தான். ஆனால் தற்போது அது எல்லாம் வேஸ்ட் என்கிற மாதிரி வேதாவின் செயல்கள் இருக்கிறது.

இதனை தொடர்ந்து விக்ரம் வேதா என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கு இடையில் மிர்லானி, தன்வியை வைத்து விக்ரம் வேதாவுக்கு இடையே ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

Trending News