வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

வீரா சீரியலில் மாறன் செய்த காரியத்தால் வீராவுக்கு தெரிய வந்த உண்மை.. உளறப்போகும் வடிவு அத்தை

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில், வீராவின் அண்ணனை கார் விபத்தில் கொன்னது ராகவன் தான் என்றாலும் அண்ணனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த பழியை மாறன் ஏற்றுக் கொண்டார். இந்த விஷயம் வடிவு அத்தைக்கு தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனால் வீராவுக்கு கல்யாணம் நடக்கும் பொழுது அனைத்து உண்மைகளும் கடைசி தங்கச்சிக்கும் தெரிந்து விட்டது.

இதையெல்லாம் தாண்டி தற்போது மாறனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கண்மணி கார் விபத்து நடந்த பொழுது நேரடியாக பார்த்த ஒருவரை மறுபடியும் கம்ப்ளைன்ட் கொடுக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் அது எதேர்ச்சியாக நடந்த விபத்து இல்லை வேண்டுமென்று திட்டமிட்டு செய்த கொலை என்று பணம் கொடுத்து அந்த நபரை கண்மணி பொய் சொல்ல வைத்து விட்டார்.

அப்படி அந்த நபர் பொய் சொல்ல வரும் பொழுது மாறன் தான் குற்றவாளி போல் அனைவரும் பேசியதால் அந்த நபர் கொஞ்சம் குழம்பி விட்டார். அதன் பின்பு தான் அவருக்கே தெரிந்தது இந்த குற்றத்திலிருந்து ராகவன் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்கு தம்பியை பகடைக்காயாக வைத்து விட்டார் என்று.

அத்துடன் இந்த உண்மை அவருக்கு மட்டும் தெரிந்ததால் ராகவனுக்கு போன் பண்ணி பணம் கேட்டு பிளாக்மெயில் பண்ண ஆரம்பித்து விட்டார். ராகவனும் இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது, முக்கியமாக கண்மணிக்கு தெரிந்து விட்டால் பிரச்சினை என்பதால் வீட்டில் இருக்கும் பணத்தை திருட ஆரம்பித்து விட்டார்.

அப்படி திருடும்பொழுது வசமாக சிக்கியதால் அந்த பணத்தை மாறன் பெட்ரூமில் போட்டு விட்டார். இதை பார்த்த வடிவு அத்தை அதை எடுத்து பத்திரமாக வைக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ராமச்சந்திரன் பார்த்துவிட்டார். பிறகு ராகவன் திருட்டு பார்வையை பார்த்த மாறன், ராகவன் தான் இந்த பணத்தை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அப்பாவுக்கு தெரிந்தால் பிரச்சினை என்பதால் நான் தான் பணத்தை திருடினேன், எனக்கு தனிப்பட்ட முறையில் செலவு இருக்கிறது அதற்காகத்தான் பணத்தை எடுத்தேன் என்று பொய் சொல்லிவிட்டார். ஆனால் இதற்கிடையில் பணத்தை எடுத்தது ராகவன் தான் என்பது வீரா பார்த்து விட்டார். இப்படி இருக்கும் பொழுது எதற்காக மாறன் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்று வீரா யோசிக்க ஆரம்பித்து விட்டார்.

அத்துடன் இந்த பிளாக் மெயில் விவாகரம் வெளியே வருவதற்கு முன் வீரா உண்மையை கண்டுபிடித்து விடுவார். அந்த வகையில் அண்ணன் இறப்பிற்கு காரணம் மாறன் இல்லை, ராகவன் தான் என்ற உண்மையையும் தெரிந்து கொள்வார். அத்துடன் இதை ஊர்ஜிதம் பண்ண வடிவு அத்தையிடம் கேட்டு வீரா எல்லா உண்மையும் தெரிந்த பிறகு மாறனை மனசார ஏற்றுக்கொள்ள போகிறார்.

Trending News