சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

கடைசியா விக்ரமே வில்லனாய் விக்ரமுக்கு கொடுக்கும் மண்டகுடைச்சல்.. வீர தீர சூரனுக்கு தோண்டிய குழி

சுந்தர் சி யின் மதகஜராஜா கொடுத்த அல்டிமேட் வெற்றியால் அடுத்தடுத்து கிடப்பில் கிடந்த பழைய படங்களை தூசி தட்டி வருகிறார்கள். அதில் ஒன்று தான் ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படம். இதுதான் இப்பொழுது அவருக்கு பெரிய தலைவலியாய் அமைந்துள்ளது.

தற்போது விக்ரம் நடிப்பில் ரிலீசாக காத்திருக்கும் வீரதீர சூரன் படத்தின் ரிலீஸ் தேதியை அவசரமாக அதிகாரப்பூர்வமாய் மார்ச் 27ஆம் தேதி என்று அறிவித்தனர். இதற்குப் பின்னால் ஒரு பெரிய சட்ட சிக்கல் இருந்துள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தை தூசி தட்டி மார்ச் 7ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். அதனால் தான் வீரதீரசூரன் படத்தின் தயாரிப்பாளர் சிபு தமிம் அதிரடியாய் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டார். இப்பொழுது தைரியமாக துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்கலாம்.

பத்து நாட்கள் இடைவெளியில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனால் ஆபத்து என இந்த முடிவை எடுத்துள்ளார் சிபு தமிம், வீரதீர சூரன் படம் ரிலீஸ் செய்த பிறகு கூட துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட்டால் நல்ல ஹைப் கிடைக்கும். ஆனால் முன்கூட்டியே ரிலீஸ் செய்கின்றனர்.

துருவ நட்சத்திரம் படத்திற்கு ஏதாவது பாசிட்டிவாக அமையாவிட்டால் அது வீரதீரசூரன் படத்தையும் பாதிக்கும். இப்படி விக்ரம் படத்திற்கு விக்ரம் படமே எமனாய் வந்து நிற்கிறது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து தூசிி தட்டப்பட்ட துருவ நட்சத்திரம் படத்திற்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Trending News