Veera Dheera Sooran: இன்று காலையிலேயே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய வீர தீர சூரன் தடைகளை தாண்டி தற்போது தியேட்டருக்கு வந்துள்ளது. இதற்காகவே காத்திருந்த சீயான் ரசிகர்கள் தற்போது அதை கொண்டாடி தீர்க்கின்றனர்.

இன்னைக்கு படத்தை பார்க்காம நகர மாட்டோம் என தியேட்டர் வாசலிலேயே தவம் இருந்த ரசிகர்களுக்கு செம ட்ரீட் கிடைத்துள்ளது. அந்த அளவுக்கு படம் வொர்த் என விமர்சனங்கள் குவிந்து கொண்டிருக்கிறது.

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ் ஜே சூர்யா, துஷாரா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பாடல்கள் வேற லெவலில் ஹிட் அடித்துள்ளது.

அதை அடுத்து தற்போது படத்தை பார்த்த ரசிகர்கள் ஆகா ஓகோ என புகழ்ந்து தள்ளி வருகின்றனர். அதிலும் முதல் பாதி வேற லெவல் சம்பவம் தான் திரைக்கதை, கதாபாத்திரம் என அனைத்துமே சிறப்பு.

அதேபோல் இடைவேளை காட்சி யாரும் எதிர்பாராத வகையில் இருக்கும். புது மாதிரியான அந்த காட்சியை ஆடியன்ஸ் நிச்சயம் என்ஜாய் செய்வார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.
மேலும் பிஜிஎம் செம மிரட்டல் ஜிவி பிரகாஷ் சம்பவம் செய்துவிட்டார் என ஆர்ப்பரித்து வருகின்றனர். இப்படியாக படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் வீர தீர சூரன் நிச்சயம் வசூலில் மாஸ் காட்டும். தங்கலானுக்கு அடுத்ததாக சீயானுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் ஆக இப்படம் அமைந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.