S.J.Suryah: நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா இன்று தன்னுடைய 56வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பல வெற்றி படங்களை இயக்கியிருந்தாலும் நடிகர் என்ற அடையாளம் தான் இவருக்கான புகழை வாரி கொடுத்துக் கொண்டிருக்கிறது.
அதில் ஹீரோவாக ஒரு பக்கம் நடித்தாலும் டாப் ஹீரோக்களை பொறுத்தவரையில் இவர்தான் அவர்களுக்கான வில்லன். அந்த வகையில் தற்போது இந்தியன் 2 படத்தில் கூட அவர் நடித்திருந்தார். அடுத்ததாக தனுஷின் ராயன் படத்திலும் நடித்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக நடிக்கும் எஸ் ஜே சூர்யா
அப்படம் வரும் வாரத்தில் திரைக்கு வருகிறது. அதை அடுத்து விக்ரமுடன் வீரதீர சூரன் படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்தில் அவருடைய கேரக்டர் என்ன என்பது சஸ்பென்சாக இருந்த நிலையில் இன்று ஒரு போஸ்டர் மூலம் அதை பட குழு தெரியப்படுத்தியுள்ளது.
அதன்படி இப்படத்தில் அருணகிரி என்னும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் எஸ் ஜே சூர்யா நடித்து வருகிறார். ஏற்கனவே மாநாடு படத்தில் இவர் போலீசாக நடித்து மிரட்டி இருந்தார்.
அதைத்தொடர்ந்து இப்படத்திலும் அவருடைய கேரக்டர் வலுவானதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் அந்த போஸ்டரில் அவர் மீசை இல்லாமல் காக்கி உடையில் போஸ் கொடுத்துள்ளார்.
இதுவே பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில் நடிப்பு அரக்கனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி ரசிகர்கள் போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். அதேபோல் ராயன் பட குழு சார்பாக சன் பிக்சரும் போஸ்டரை வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
எஸ் ஜே சூர்யாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வீரதீர சூரன்
- 56 வயதில் எஸ் ஜே சூர்யா சேர்த்த மொத்த சொத்து மதிப்பு
- பெண்ணால் நடந்த கைது, பெண்ணாலேயே தலை நிமிர்ந்த எஸ் ஜே சூர்யா
- பின்னி பெடலெடுக்கும் எஸ் ஜே சூர்யா