புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

வீரா சீரியலில் மாறனுக்காக வாதாட களமிறங்கிய வீரா.. பாண்டியராஜன் சொல்லப்போகும் தீர்ப்பு, தோற்கும் கண்மணி

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், தெரிந்து தெரியாமலோ வீராவின் அண்ணன் இறப்பிற்கு ராமச்சந்திரன் குடும்பம் காரணமாகிவிட்டது. ஆனாலும் அண்ணனை காப்பாற்றுவதற்காக அந்த விபத்து பண்ணியது நான் தான் என்று மாறன் அவர் மீது பழியை போட்டு விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கண்மணி அண்ணன் இறப்பிற்கும் ராஜேஷ் இறப்பிற்கும் நான் பழிவாங்கியே தீருவேன் என்று ராமச்சந்திரன் குடும்பத்திற்கு மருமகளாகவும் ராகவனுக்கு மனைவியாகவும் உள்ளே நுழைந்து விட்டார்.

அடுத்ததாக வீராவின் கல்யாணமும் எதிர்பார்க்காத வகையில் மாறனுடன் நடந்து விட்டது. ஆரம்பத்தில் மாறன் எனக்கு தேவையில்லை விவாகரத்து பண்ண போகிறேன் என்று பிடிவாதமாக இருந்த வீராவிற்கு உண்மையான விஷயங்கள் தெரிந்த பிறகு மாறனை காதலிக்க தொடங்கி புருஷனாக ஏற்றுக் கொண்டார். அதற்கு காரணம் ராகவன் மாமா செய்த தவறுக்கு மாறன் பழி ஏற்றுக்கொண்டார்.

அதனால் மாறன் மீது எந்த தவறும் இல்லை என்று வீரா புரிந்து கொண்டு, மாறனுக்கு ஏற்ற மனைவியாக வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். ஆனால் இந்த சூழ்நிலையில் கண்மணி, மாறனை பழி வாங்குவதற்காக போலீஸ் மூலம் புதுசாக காய் நகர்த்தி விட்டார். அதாவது மாறன் ஏற்படுத்தியது திட்டமிட்டு செய்த விபத்து. அதனால் தான் ராஜேஷ் மற்றும் என்னுடைய அண்ணன் இறந்து போய்விட்டார்கள் என்று யாருக்கும் தெரியாமல் போலீஸிடம் கண்மணி சொல்லிவிட்டார்.

அதனால் போலீசும் மாறனை எப்படியாவது விசாரித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று துடித்தார். அதன் பிறகு வீரா மாறன், சேர்ந்து போலீசை அலட்சியப்படுத்தினால் ஒருநாள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி கோர்ட்டில் கேஸ் போட ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் மாறன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் மாறனுக்கு சப்போர்ட்டாக எந்த வித லாயரும் ஆஜராகவில்லை.

ஆனால் ஜட்ஜ் ஆக பாண்டியராஜன் என்டரி கொடுத்து விட்டார். மேலும் மாறனுக்கு சப்போர்ட்டாக வாதாட எந்த லாயரும் இல்லாத பட்சத்தில் கோர்ட்டில் வீரா நான் சில கேள்விகளை கேட்டு உண்மையான விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதனால் எனக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டு மாறனுக்காக வீரா வாதாட போகிறார். அந்த வகையில் விபத்து பண்ணியது ராகவன் தான் என்ற உண்மையையும் வெளிவராமல் மாறனையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்கு ஏற்ற மாதிரி வீரா வாதாடி மாறனை வெளிக்கொண்டு வந்துவிடுவார்.

Trending News