Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற வீரா சீரியலில், மாறன் மீது எந்த தவறும் இல்லை என்ற ரகசியத்தை வீரா புரிந்து கொண்டார். அந்த வகையில் இதை ஊர்ஜிதம் படுத்தும் விதமாக எப்படி பேசினால் வள்ளி அத்தை இடம் உண்மையை வாங்க முடியுமோ, அப்படி பேசி உண்மையை வீரா தெரிந்து கொண்டார்.
அதாவது வீராவுக்கு வந்த சந்தேகத்தின்படி அத்தை இடம் சென்று மூன்று பிள்ளைகளையும் ஒன்னு போல பார்த்து நீங்க வளர்க்கல. ஒரு பிள்ளை வாழ்க்கைக்காக இன்னொரு பிள்ளையை பலியாடாக சிக்க வைத்து விட்டீர்கள். இதனால் என்னுடைய வாழ்க்கை பற்றி கூட யோசிக்காமல் நீங்கள் இருப்பது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு பையன் வாழ்க்கைக்காக இன்னொரு பையன் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்று எப்படி யோசிக்க முடியும். நீங்க சொல்ற பதில்ல தான் நான் இங்கே இருக்கணுமா இல்லையென்றால் வீட்டை விட்டு போகணுமா என்று முடிவெடுக்க போகிறேன். ஆனால் இவ்வளவு விஷயத்தை தெரிந்து கொண்ட எனக்கு ஆதாரத்தை வைத்து நிரூபிக்கவும் முடியும்.
அப்படி மட்டும் நான் நிரூபித்து விட்டால் உங்களை நிரந்தரமாக நான் தலைமுழுகி விடுவேன் என்று வள்ளி அம்மாவிடம் வீரா கரராகப் பேசி விட்டார். வீரா பேச பேச வள்ளியத்தை என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்க ஆரம்பித்து விட்டார். பிறகு ஒரு கட்டத்திற்கு மேல் மாறன் மீது வள்ளி அத்தை வைத்திருக்கும் பாசம் பொய் என்பதற்கு ஏற்ப வீராவின் கேள்வி இருந்ததால் வள்ளியத்தை உண்மை சொல்லி விட்டார்.
அதாவது வீராவிடம் உங்க அண்ணனை விபத்து பண்ணியது மாறன் இல்லை, ராகவன் தான் என்று சொல்லிவிட்டார். இதனால் அதிர்ச்சியான வீரா இத்தனை நாளாக நீங்க உண்மையை மறைத்ததினால் எவ்வளவு தூரம் மாறன் கஷ்டப்பட்டு பிரச்சனையை சமாளித்து இருக்கிறான் என்பது உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மாறன் மட்டும் பாதித்தது இல்லாமல் நானும் அவனுடன் சேர்ந்து பாதித்தேன் என்பதும் உங்களுக்கு தெரியவில்லையா என்று கேள்வி கேட்கிறார். இருந்தாலும் இதில் ராகவனையும் மாட்டி விட்டால் கண்மணி வாழ்க்கை கேள்விக்குள்வி ஆகிவிடும் என்பதால் வீராவும் அவருக்கு தெரிந்த உண்மையை யாரிடமும் சொல்லாமல் மறைக்கப் போகிறாரா? அல்லது தப்பு செஞ்சவங்க தண்டனை அனுபவிக்கணும் என்பதற்கு ஏற்ப குடும்பத்தில் இருப்பவரிடம் உண்மையை சொல்லப் போகிறாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
அப்படி மட்டும் வீரா நடந்த உண்மையை சொல்லிவிட்டால் ராகவன் மற்றும் கண்மணி வாழ்க்கையில் விரிசல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதையெல்லாம் தொடர்ந்து மாறன் மீது எந்த தவறும் இல்லை அண்ணனுக்காக பழியை சுமந்து இருக்கிறார் என்று தெரிந்து கொண்ட வீரா, மாறன் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அரவணைப்பாக பேசி அவருடைய மனதில் இருக்கும் காதலையே வெளிப்படுத்தும் விதமாக மாறனை வீரா புருஷனாக ஏற்றுக் கொண்டார்.