வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விஷாலை காப்பாற்றுமா வீரமே வாகை சூடும்.? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

நடிகர் விஷால் நடிப்பில் சரவணன் இயக்கியுள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று தியேட்டர்களில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.

veeramevaagaisoodum
veeramevaagaisoodum

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விஷாலுடன் இணைந்து டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

vishal-veerame-vaagai-soodum-1
vishal-veerame-vaagai-soodum-1

உலகமெங்கும் 2000 தியேட்டர்களில் வெளியாகி உள்ள இப்படத்தை தற்போது விஷால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவில் மட்டும் இப்படம் 1500 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

vishal-veerame-vaagai-soodum-3
vishal-veerame-vaagai-soodum-3

ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நகைச்சுவை காட்சிகள் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. மேலும் பெண்கள் சம்பந்தப்பட்ட இந்த கதையில் ரவீனா ரவி கதாபாத்திரம் அனைவருக்கும் பிடித்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

vishal-veerame-vaagai-soodum-4
vishal-veerame-vaagai-soodum-4

படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர் மேலும் இது ஏற்கனவே பார்த்து பழகிய பழைய கதை. இந்த மாதிரி கதைகளில் விஷால் குறைந்தது 5 படங்களாவது செய்திருக்கிறார்.

vishal
vishal

சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை என்றும் சிலர் இந்த படம் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது.

Trending News