வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பார்ட்டியில் கேவலமாக நடந்து கொண்ட வெண்பா.. கேவலப்படுத்திய பாரதி!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதியை கண்ணம்மாவிடம் இருந்து பிரித்த வெண்பா, ஒன்பது வருடங்களுக்கு மேல் ஆனாலும் அவளால் பாரதியை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்த வெண்பாவின் அம்மா ரோகித் என்பவரை வெண்பாவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்.

ரோகித் -துக்கு வெண்பா பாரதியை காதலிப்பது தெரியும். இருப்பினும் வெண்பாவின் மீது ரோகித்திற்கு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டதால், அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறான். இருப்பினும் அவளுடைய காதலை கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்த வெண்பா பார்ட்டி ஒன்றில் வெண்பாவின் அம்மா ரோஹித்தை வெண்பாவின் வருங்கால கணவன் என அறிமுகம் செய்து வைக்கிறார்.

இதன்பிறகு வெண்பா, ‘நான் பாரதிதான் காதலிக்கிறேன். பாரதி தான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். ரோகித்தை எனக்கு பிடிக்கவில்லை’ என அனைவரின் முன்னிலையிலும் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் அடுத்தவன் புருஷனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என சொல்கிறாள்.

இதைக் கேட்டதும் ஆடிப் போன பாட்டிலில் இருந்த அனைவரும், பாரதியை ஒரு மார்க்கமாக பார்க்க உடனே பாரதி எழுந்து நின்று, ‘எனக்கு வெண்பாவை திருமணம் செய்துகொள்ள ஒரு சதவீதம்கூட விருப்பமில்லை’ என வெண்பாவிற்கு நெத்தியடி பதில் கொடுக்கிறான்.

இதன் பிறகாவது வெண்பாவிற்கு உரைக்க வேண்டும் என்பதற்காகவே பாரதி இப்படி காட்டமாக தன்னுடைய விவாதத்தை சபையில் வைக்கிறான். மேலும் இந்த பார்ட்டியில் பாரதியின் மனைவி கண்ணம்மா, பாரதியின் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் தலைகுனிவு ஏற்பட்டது.

இதன் பிறகு பாரதிகண்ணம்மா சீரியலில் இனி வரும் நாட்களில் வெண்பா வேறு வழியில்லாமல் ரோஹித்தை திருமணம் செய்துகொண்டு, அதன் பிறகும் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் பிரிப்பதற்காக ஏதாவது சதி வேலையை பார்த்துக் கொண்டே தான் இருக்கப் போகிறாள்.

Trending News