புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இனி வெண்பா அவ்வளவுதான் போல .. வில்லியை டம்மியாக்கும் இயக்குனர்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒன்பது வருடங்களாக தன்னுடைய மனைவி மற்றும் மகள்களை பிரிந்து பாரதியைத் தனித்து வாழ செய்த வெண்பாவிற்கு தற்போது கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. இதனால் இவ்வளவு நாள் வெண்பாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத பாரதி இப்பொழுது அவளை ஒரு பொருட்டாகவே கண்டுகொள்ளாமல் தன்னுடைய சுய புத்தியில் ஒவ்வொரு முடிவையும் எடுத்துக் கொண்டிருக்கிறான்.

அந்த வகையில் சமீபத்தில் போலீஸாரால் கைது செய்யப்பட்ட வெண்பா, அதன் பிறகு அவளுடைய அம்மாவின் உதவியுடன் வெளியே வந்து இருக்கிறாள். இந்நிலையில் போலீசார் தன்னை அழைத்து சென்றது பற்றியும், அதன் பிறகு வெளியே வந்த பிறகும் தன்னை விசாரிக்கவில்லை என பாரதியின் மீது வெறுப்பில் அவனை சந்தித்து ‘ஐ ஹேட் யூ’  என திட்டி தீர்க்கிறாள்.

அந்த சமயத்திலும் பாரதி, வெண்பாவை சமாதானப்படுத்தாமல் அவள் கோபமாக பேசும்போது அமைதியாக இருக்கிறான். அதன்பிறகு வீடு திரும்பிய வெண்பா நடந்ததை வீட்டு வேலைக்காரியிடம் சொல்லி, அழுது கதறுகிறாள்.

இனி எனக்கு பாரதி வேண்டுமே வேண்டாம் என அவள் சொல்வதைக் கேட்ட வெண்பாவின் அம்மா, இப்பதான் நீ என்னுடைய வழிக்கு வந்திருக்கிறாய். இனி பாரதியைப் பற்றி மறந்துவிட்டு நான் சொல்லும் வாழ்க்கையை தேர்வு செய்து வாழத் துவங்கும் என வெண்பாவிற்கு அவளுடைய அம்மா அறிவுரை கூறுகிறாள்.

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஏற்கனவே வெண்பா, பாரதியிடம் ‘ஐ ஹேட் யூ’ என சொன்னதற்கு அவன் பதில் பேசாமல் நின்றதை நினைத்து புழுங்கிக் கொண்டிருக்கும் வெண்பாவின் அவளுடைய அம்மா மேலும் மேலும் இப்படியெல்லாம் பேசி கடுப்பேத்துகிறார்.

இருப்பினும் வெண்பாவின் அம்மா நினைப்பதுபோல் வெண்பா அவ்வளவு சீக்கிரம் பாரதியை, கண்ணம்மாவிற்கு விட்டுக்கொடுத்து வேறு வாழ்க்கையை தேர்வு செய்ய மாட்டாள். வெண்பா இந்த சீரியலின் வில்லி என்பதால், நிச்சயம் பாரதிகண்ணம்ம விற்கு இடையூறாக இருந்தால் மட்டுமே அவளுடைய கதாபாத்திரம் பேசும் அளவுக்கு இருக்கும்.

Trending News