ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 2, 2025

வசமாக எலி பொறியில் சிக்கிக்கொண்ட வெண்பா.. ஆட்டிவைக்கும் முரட்டு வில்லன்

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் மனைவியுடன் வாழ விடாமல் ஒன்பது வருடங்களாக வில்லி வெண்பா, பாரதியை தன் கைக்குள் வைத்து நாடகத்தை கச்சிதமாக ஆடிக் கொண்டிருக்கிறாள்.

இவ்வாறு இருக்க கோபத்தில் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரை எப்படி பிரித்தேன் என்பதையும் பாரதிக்கு உடலில் எந்த பிரச்சினை இல்லை என்பதையும் லஷ்மி மற்றும் ஹேமா இருவரும் கண்ணம்மாவின் குழந்தைகள் என்ற உண்மையையும் வேலைக்காரி சாந்தியிடம் வெண்பா உளறிக் கொட்டியதை வெண்பாவின் பழைய கூட்டாளியான மாயாண்டி வீடியோ எடுத்து வைத்திருக்கிறான்.

இந்த வீடியோவை வைத்து அவ்வப்போது வெண்பாவை மிரட்டுவது மட்டுமல்லாமல் பணம் பறிக்கவும் செய்கிறான். அவ்வாறு தற்போது மாயாண்டி, வெண்பாவிற்கு தொலைபேசி மூலம் அழைத்து 50 ஆயிரம் ரூபாய் எனக்கு வேண்டும் என கேட்கிறான். உடனே வெண்பா அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அந்த வீடியோவை வெண்பாவிற்கு அனுப்புகிறான்.

இதனால் ஆடிப்போன வெண்பா, எலி வலையில் சிக்கியது போல் மாட்டிக் கொண்டேனே என புலம்புகிறாள். அத்துடன் இந்தப் பிரச்சனைக்கு தீர்ப்பு காண வேண்டும் வில்லத்தனமாக யோசித்து, மாயாண்டி வீட்டுக்கு வரச்சொல்லி பணம் கொடுப்பதுபோல் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுக்கப் போகிறாள்.

இதற்கு வீட்டு வேலைக்காரி சாந்தி உதவி செய்கிறாள். அதன்பிறகு மயங்கிய மாயாண்டியை ஏற்கனவே வெண்பாவிற்கு குடைச்சல் கொடுத்த துர்கா உடன் மாயாண்டியின் சேர்த்துக் கட்டிவைக்க வெண்பா திட்டமிடுகிறார். இதற்கு சோத்து வண்டி மாயாண்டி யும் ஒத்துழைத்து, வெண்பா கொடுத்த சாப்பாட்டை முழுங்கி வெண்பாவின் கையில் வசமாக சிக்க போகிறான்.

இவ்வாறு தனக்கு வந்த பிரச்சனையை அசால்டாக சந்திக்கும் வெண்பா நாளுக்கு நாள் சீரியலில் கொடூரமான வில்லியாக மாறிக் கொண்டிருக்கிறாள். அதுமட்டுமின்றி பாரதி மற்றும் கண்ணம்மா இருவரையும் சேரவிடாமல் அதற்கு இடையூறாக வரும் அனைவரையும் அசால்டாக சமாளிக்கிறார். எனவே பாரதிகண்ணம்மா சீரியலில் வெண்பாவின் கதாபாத்திரம் இந்த சீரியலின் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

Trending News