சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நயவஞ்சகத்தின் உச்சத்துக்கே சென்ற வெண்பா.. முட்டாள் பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் 10 வருடங்களாக பாரதிக்கு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை என நம்ப வைத்து கண்ணம்மாவின் மீது சந்தேகத்தை வர வைத்திருக்கிறார் வெண்பா. ஆனால் அவரால் பாரதியை மட்டும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் போனது.

ஒருகட்டத்தில் சௌந்தர்யா மற்றும் வெண்பாவின் அம்மா இருவரும் சேர்ந்து ரோகித் உடன் வெண்பாவிற்கு நிச்சயதார்த்தத்தை நடத்தி கல்யாணத்திற்கு நாள் குறித்து விட்டனர். அப்போது எதிர்பாராத விதமாய் ரோகித்துடன் சேர்ந்து குடித்த வெண்பா, அவருடன் குடிபோதையில் தவறு செய்ததால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

Also Read: ஈகோவை விட்டு இறங்கி வந்த பாரதி.. இப்பயாவது ஒரு எண்டு கார்டு போடுங்கப்பா

ரோகித்தை திருமணம் செய்து கொள்ள விரும்பாத வெண்பா, வயிற்றில் வளரும் குழந்தையை பகடைக்காய் பயன்படுத்துகிறார். ஹோட்டலில் நண்பர்களுடன் மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும் தன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தைக்கு அப்பா யார் என்று தெரியவில்லை என்றும் பாரதியிடம் வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.

எனவே தனக்கும் தன்னுடைய குழந்தைக்கும் இந்த சமுதாயத்தில் ஒரு அடையாளம் கிடைப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பாரதியின் காலைப்பிடித்து வெண்பா கதறுகிறார். இதற்கு தொடக்கத்தில் மறுத்த பாரதி, அதன் பிறகு வெண்பா தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததால் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்.

Also Read: பிளாக்மெல் செய்த வெண்பா.. வேறு வழியில்லாமல் பாரதி எடுக்கும் முடிவு

பிறகு அங்கு வெண்பா இல்லாத நாடகத்தை எல்லாம் அரங்கேற்றி நயவஞ்சகத்துடன் பாரதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திருக்கிறார். இந்த விஷயம் கண்ணம்மாவிற்கும் தெரிய வருகிறது. அப்போது முட்டாள்தனமாக முடிவெடுத்த பாரதியை கண்ணம்மா வெளுத்து வாங்குகிறார்.

மேலும் கண்ணம்மாவிற்கு வெண்பா போட்ட விஷ ஊசியின் வீரியம் தீவிரமாக வேலை செய்கிறது. இதனால் மருத்துவரான பாரதி மருத்துவமனையில் அதிக காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டிருக்கும் கண்ணம்மாவின் உயிரை லஷ்மிக்காகயாவது காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறார்.

Also Read: புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

மேலும் ஹேமாவிற்கும் பாரதி காண்பித்த அம்மா தன்னுடைய சொந்த அம்மா இல்லை என்ற விஷயமும், அவர் ஒரு அனாதை குழந்தை என்ற விஷயமும் பாரதி மூலம் தெரிய வருகிறது. இப்படி விருவிருப்பான சம்பவங்கள் வரும் வாரத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் ஒளிபரப்பாக போகிறது.

Trending News