வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Venkat Bhat: 24 வருஷ விஜய் டிவி வெற்றியின் ரகசியத்தை உடைத்த வெங்கட் பட்.. நான் திடீரென்று விலக இதுதான் முக்கிய காரணம்

Venkat Bhat: திறமை இருந்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் நிச்சயமாக கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக தற்போது பலரும் பிரபலமாகி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் செஃப் வெங்கட் பட் சமையல் வல்லுனராக மிகவும் பிரபலமாக இருக்கிறார். இதற்கு மிக முக்கிய பங்கு விஜய் டிவி தான் என்றே சொல்லலாம்.

அதாவது கடந்த 24 வருஷமாக விஜய் டிவியில் தொடர்ந்து இவருடைய பயணத்தை மேற்கொண்டு வந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் திடீரென்று விஜய் டிவியில் இருந்து விலகி சன் டிவிக்கு போனதற்கான காரணம் என்னவென்று சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பட் கூறியிருக்கிறார்.

நன்றிகடனை செலுத்திய வெங்கட் பட்

அந்த வகையில் இவருடைய ஆரம்ப கால வாழ்க்கை விஜய் டிவியில் சமையல் வித் வெங்கடேஷ் பட் என்ற நிகழ்ச்சி மூலம் தொடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர் மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார். அதுவும் 15 முதல் 20 சீசன்களை தொகுத்து வழங்கி இருக்கிறார். அத்தனை சீசன்களையும் மீடியா மேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது.

இன்னும் சொல்ல போனால் இடைப்பட்ட காலத்தில் இவருக்கு வேறு எந்த இடத்தில் இருந்து அழைப்புகள் வந்தாலும் உடனே அட்வைஸ் கேட்பது மீடியா மேஷன்ஸ் கிட்ட தான். அதற்கு அவர்கள் அடிக்கடி வெவ்வேறு இடத்திற்கு போனால் உன்னுடைய தனித்துவம் தெரியாமல் போய்விடும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதன்படி தான் நான் வேறு எங்கேயும் போகாமல் விஜய் டிவியில் மட்டும் என் பயணத்தை தொடர்ந்தேன்.

அந்த அளவிற்கு மீடியா மேஷனில் இருக்கும் ரூபா மற்றும் பிரதிமா உடன்பிறவா சகோதரர்களாக என் கூடவே இருந்து வழி நடத்தியதாக வெங்கட் பட் கூறியிருக்கிறார். அவர்கள் அட்வைஸ் படி நான் கேட்டதால்தான் எனக்கு இப்பொழுது பெரும் புகழும் கிடைத்திருக்கிறது.

என்னை வெளியில் நன்றாக காட்டிய பெருமை அவர்களை தான் சாரும். அவர்கள் கொடுத்த முழு சுதந்திரத்தில் தான் என்னால் 24 வருஷமாக விஜய் டிவியில் இருக்க முடிந்தது. அன்று முதல் இன்று வரை விஜய் டிவியில் ஏராளமான மாற்றங்கள் இருந்திருக்கிறது.

ஆனால் மீடியா மேசன்சில் இதுவரை எந்த ஒரு மாற்றமும் வந்ததே இல்லை. அதே நபர்களுடன் தான் நான் அன்றிலிருந்து இப்பொழுது வரை பயணத்திருக்கிறேன். அதனால் அவர்களிடம் மட்டும் தான் எனக்கு ஒரு கம்போர்ட் கிடைத்திருக்கிறது. இதுவரை நான் செய்த அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்து என்னை பேச வைத்ததும் அவர்கள் தான்.

தற்போது அவர்களுக்கும் விஜய் டிவி சின்ன மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் விஜய் டிவியில் இருந்து அவர்கள் வெளியே போய் சன் டிவிக்கு இணைந்து விட்டார்கள். அந்த நேரத்தில் விஜய் டிவியில் இருந்து என்னை மறுபடியும் குக் வித் கோமாளி சீசனுக்கு கூப்பிட்ட பொழுது கூட எனக்கு மீடியாவை விட நன்றி கடன் தான் ரொம்ப முக்கியம் என்று சொல்லி அவர்களுடன் சேர்ந்து சன் டிவிக்கு நான் போய்விட்டேன் என்ற உண்மையை போட்டு உடைத்து இருக்கிறார்.

சன் டிவிக்கு மட்டும் இல்லை அவர்கள் வேறு எந்த சேனலுக்கு போனாலும் நானும் அவர்களுடனே போய் விடுவேன் எனக்கு சேனல் முக்கியமில்லை என்று வெங்கட் பட் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். இப்பொழுது தான் தெரிகிறது விஜய் டிவி ரியாலிட்டி ஷோ இத்தனை வருடமாக வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் மீடியம் மேசன் நிறுவனம் தான் என்று.

Trending News