கிட்டத்தட்ட 200 கோடிகள் செலவு செய்து எடுத்த கோட் படம் 400 கோடிகள் வரை வசூலை வாரி குவித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர், வெங்கட் பிரபு என அனைவரும் குஷி மூடில் இருக்கிறார்கள். இதையும் தாண்டி டபுள் உத்வேகத்துடன் அரசியல் வேலைகளில் பிசியாக இறங்கியுள்ளார்.
இப்பொழுது தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் நடைமுறையில் இருந்து வருகிறது. அதாவது ஒரு படம் நன்றாக வசூலித்து விட்டால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் ஹீரோக்களுக்கு பரிசு பொருட்களை வாரி வழங்கி அவர்களை சந்தோஷப்படுத்துகின்றனர்.
கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திடம் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் இருக்கிறது. ஒன்று கல்பாத்தி அகோரம் வைத்திருக்கிறார், மற்றும் இரண்டு கார்கள் அவர்கள் வாரிசான கணேஷ் மற்றும் சுரேஷ் இருவரிடம் இருக்கிறது. எப்படியும் ஏதாவது விளை உயர்ந்த கிப்ட் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து வெங்கட் பிரபுவுக்கு காத்திருக்கிறது.
ஏஜிஎஸ்க்கு முன்னாடி காட்டிய கெத்து
வெங்கட் பிரபு இப்பொழுது தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் அவர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் 86 லட்சத்திற்கு ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கி உள்ளார். இது அந்த நிறுவனத்தின் டாப் எண்டு மாடல், ரிவோக் வகை கார் என்று கூறுகிறார்கள்.
வெங்கட் பிரபு வாங்கிய ரேஞ்ச் ரோவர் கார் மிகவும் ஆடம்பர வசதிகள் கொண்டதாம். ஆனால் அதை அவர் அவசரப்பட்டு வாங்கி விட்டார் என்று அவரது நட்பு வட்டாரங்கள் அவரை கலாய்த்து வருகின்றனர். எப்படியும் ஏஜிஎஸ் நிறுவனம் அவருக்கு கார் பரிசாக கொடுக்கும். அதற்கு முன் தன்னுடைய கெத்தை காட்டிவிட்டார் வெங்கட் பிரபு.