வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருந்த இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகி சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
வெங்கட் பிரபு இயக்கம் என்றாலே அந்தப் படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருப்பார்கள். இதுவரை அவர் இயக்கிய படங்களில் ஒருசில படங்களே தோல்வியடைந்திருக்கின்றன. இருப்பினும் அவர் திரைக்கதையை கொண்டு செல்லும் விதம் நன்றாக இருக்கும்.
ஆனால் காட்சிகளை அட்டு காப்பி அடிப்பதில் அட்லீயை மிஞ்சி விட்டார். எல்லா படத்திலும், வெங்கட் பிரபு ரெஃபரென்ஸ் என்ற பெயரில் காப்பி அடிக்கவில்லை என்றாலும் கோட் படத்தில், “கொஞ்சம் ஓவரா தான் போறோமோ? போவோம்.. எவன் கேட்பான்” என்ற போக்கில் தான் போயிருக்கிறார்.
“கிளைமாக்ஸ் உங்களால guess பண்ணவே முடியாது. விறுவிறுப்பா போகும்.. 1000 கோடி வசூல் confirm” என்றெல்லாம் சொன்னார். “ஆம்.. ஒருவகையில் இவர் சொன்னது உண்மை தான், இப்படி பட்ட ஒரு கிளைமாக்ஸ் ஒரு ஹாலிவுட் படத்தில் இருந்து, அப்படியே ஈ அடிச்சான் காப்பி அடித்திருப்பீர்கள் என்று guess பண்ணவில்லை”, என்று x வலைத்தளத்தில் வெங்கட் பிரபுவை வச்சு செய்துகொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.
ஹாலிவுட்டில் முக்கியமான மற்றும் பிரபலமான படமாக உள்ளது final score. இந்த படத்தின் கிளைமாக்ஸை அப்படியே காப்பி அடித்து வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. இதை ரெஃபரென்ஸ் என்று கூட சொல்லமுடியாது. ஏன் என்றால், காட்சிகளில் எந்த மாற்றமும் இல்லை.
ஒரே மாற்றம், அதில் கால்பந்து விளையாடுவார்கள், கோட் படத்தில் மட்டைப்பந்து விளையாடுகிறார்கள். இதை பார்த்த விஜய் ரசிகர்கள், “இதுக்கு அட்லீயே பரவா இல்லை ” என்று கிண்டல் செய்து வருகின்றனர். அடுத்தாக ஹெச். வினோத் என்ன செய்ய காத்திருக்கிறாரோ.