ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வெங்கட் பிரபு போட்டுள்ள அதிர்ச்சியான டுவிட்.. பயில்வானுக்கு அப்படி என்னதான் ஆச்சு

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்திற்குப் பிறகு வேற லெவலில் உள்ளார். எப்போதுமே கலகலப்பாக இருக்கக்கூடிய வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் ஆச்சரியப்படும் விதமான விஷயங்களை பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு சமீபத்தில் பயில்வான் புகைப்படத்தை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

அதாவது பயில்வான் ரங்கநாதன் நடித்த போது இருந்த பிரபலத்தை விட பல நடிகர்கள், நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை யூடியூப் பேசி அதிக பிரபலமாகி உள்ளார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நிலையில் அவருடைய புகைப்படத்தை வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். அதுவும் ஏ ஆர் ரகுமான் ஸ்டைலில் வெளியிட்டு இருக்கிறார்.

Also Read : தமிழில் கல்லா கட்டுமா? வெங்கட் பிரபு, நாக சைத்தன்யா கூட்டணி.. கஸ்டடி டீசர் எப்படி இருக்கு.?

அதாவது பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய இரண்டு கைகளிலும் ஆஸ்கர் வைத்திருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் அதில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் இசை வெல்லம் பயில்வான் ரங்கநாதன் சாருக்கு அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எங்களுக்கு செம்ம பெருமையான தருணம், உங்கள் பணியின் தீவிர ரசிகன் சார் என்ற இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டிருக்கிறார். எப்படி பயில்வானுக்கு ஆஸ்கர் கிடைத்துள்ளது என்ற குழப்பம் ரசிகர்களுக்கு உருவாகியுள்ளது. அதாவது ஒரு படத்தின் ப்ரோமோஷனுகாக வெங்கட் பிரபு இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : சிம்புவின் சினிமா கேரியரை க்ளோஸ் பண்ண 5 படங்கள்.. மீண்டும் வாழ்வு கொடுத்த வெங்கட் பிரபு

மேலும் ஜிவி பிரகாஷின் படத்தில் பயில்வான் நடிக்கிறார் என்றும் அவரை வைத்து ப்ரோமோஷன் செய்துள்ளனர். ஏனென்றால் பயில்வான் எது செய்தாலும் இப்போது வைரலாக பரவி வருகிறது. வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள போட்டோவை பயில்வானும் தனது முகநூலில் வெளியிட்டு இருக்கிறார்.

venkat-prabhu

அதுமட்டுமின்றி இந்த போட்டோவுக்கான காரணம் விரைவில் வெளியாக இருக்கிறது. எந்த படத்தில் தான் பயில்வான் நடிக்கிறார் என்ற விபரமும் தெரிய வரும். மேலும் பயில்வானின் ஆஸ்கர் போட்டோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து இணையத்தில் கலாய்த்து வருகிறார்கள்.

Bailwan-Ranganathan

Also Read : நைட் பார்ட்டியில் கும்மாளம் போட்ட பொன்னியின் செல்வன் நடிகை.. அம்பலப்படுத்திய பயில்வான்

Trending News