புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

விஜயகாந்த் மாதிரி மற்றும் ஒரு இறந்த பிரபலத்தை கௌரவிக்கும் வெங்கட் பிரபு.. GOAT படத்தில் அதிநவீன AI டெக்னாலஜி

Venkat Prabhu in Goat: பொதுவாக வெங்கட் பிரபு படம் சும்மா போற போக்குல ஒரு கதையை எடுக்கலாம் என்று நினைத்து ஜாலியாக எடுக்கக் கூடியவர். ஆனால் எப்படியாவது ஒரு வெற்றியை தொட்டுவிடும். அதுவும் முன்னணி நடிகர்களுக்கு இவருடைய படம் பெரிய அளவில் கை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் அஜித்துக்கு மங்காத்தா சிம்புவுக்கு மாநாடு போன்று இரண்டு படங்களையும் பிளாட்பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் முதன்முறையாக விஜய் உடன் கூட்டணி வைத்து GOAT படத்தை எடுத்திருக்கிறார். இவர்கள் இருவருடைய காம்பினேஷன் எந்த மாதிரி ஒர்க் அவுட் ஆகும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அமையும். அத்துடன் விஜய்யுடன் சேர்ந்து பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, மோகன், லைலா, சினேகா போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளார்கள்.

கோட் படத்திற்கு மெலடியை சேர்க்க போகும் யுவன்

இதனை தொடர்ந்து வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் பண்ண தயாராகி விட்டார்கள். மேலும் இந்த படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் மற்றும் யுவன் இணைந்தது ரசிகர்களை பெரிய அளவில் சந்தோசப்படுத்தியது.

ஆனால் GOAT படத்தில் இருந்து வந்த விசில் என்கிற பாடல் ரசிகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் அடுத்தடுத்த பாடல்களை எப்படியாவது ஹிட்டாக்கி விட வேண்டும் என்று யுவன் கடுமையாக உழைத்து வருகிறார். இன்னொரு பக்கம் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வெற்றி இயக்குனராக ஜொலிக்க வேண்டும் என்று வெங்கட் பிரபு கடும் முயற்சி பண்ணி வருகிறார்.

அந்த வகையில் அதிநவீன டெக்னாலஜியை பயன்படுத்தி பல சாகசங்களை செய்து காட்டி வருகிறார். இதனால் மறைந்த விஜயகாந்த் அவர்களை நினைவூட்டும் விதமாக விஜய் உடன் சேர்த்து வைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று AI டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் க்கு சில காட்சிகள் கொடுத்து அமைத்திருக்கிறார்.

இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் ரொம்பவே ஆர்வமாக இந்த ஒரு தருணத்தை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை இன்னும் மெருகேற்றும் வகையில் இளையராஜாவின் மகள் பவதாரணியை கௌரவிக்கும் விதமாக அவருடைய சொந்த குரலில் ஒரு பாடலை AI தொழில்நுட்பத்துடன் யுவன் உருவாக்கப் போகிறார்.

அந்த வகையில் வருகிற இந்த பாடல் ஒரு மென்மையான மெலடி பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ விஜய்க்கு இப்படத்தின் மூலம் வெற்றி கிடைத்தால் ரசிகர்களுக்கு அதுவே மிகப்பெரிய ட்ரீட்டாக இருக்கும்.

கோட் படத்தின் சுவாரஸ்ய தகவல்

Trending News