திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

வாரிசு நடிகரை இயக்கும் வெங்கட்பிரபு.. பழிவாங்க இப்படியும் ஒரு வழி இருக்கா

தமிழ் நடிகர்களின் படங்கள் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி வருகிறது. அதேபோல் தமிழ் நடிகர்கள் நேரடியாக தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகின்றனர். தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் வாத்தி படத்தின் மூலம் தனுஷ் நேரடியாக தெலுங்கு சினிமாவில் களம் காண்கிறார்.

அதேபோல் சிவகார்த்திகேயன் Sk 20 என்ற தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சத்யராஜும் நடிக்க உள்ளார். வாத்தி, Sk 20 இந்த இரண்டு படங்களும் தமிழ் மொழியில் டப்பிங் செய்து வெளியாகயுள்ளது.

தெலுங்கு சினிமாவில் தமிழ் நடிகர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்துவதால் தெலுங்கு நடிகர்களுக்கு அங்கு பட வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாமல் தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்க ஆர்வம் செலுத்துகிறார்கள். இதனால் தெலுங்கு நடிகர்களுக்கு அங்கு மார்க்கெட் குறைந்து வருகிறது.

இதனால் தெலுங்கு நடிகர்கள் தற்போது நேரடியாக தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யா நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க உள்ளார். இது நாகசைதன்யாவின் முதல் தமிழ் படம் ஆகும்.

இதனைப்பற்றி சினிமா வட்டாரத்தில் விசாரித்தபோது தமிழ் நடிகர்களால் தெலுங்கு சினிமாவில் தெலுங்கு நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. இதனை பழிவாங்குவதற்காக தெலுங்கு நடிகர்களும் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.

இதனால் எங்களுக்கும் ஏராளமான தமிழ் படங்கள் கிடைக்கும். அப்போது உங்களுக்கு தமிழ் பட வாய்ப்பு கிடைக்காது என்பதற்காகவே தற்போது தெலுங்கு நடிகர்கள் தமிழ் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News