வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

தளபதி 68 விஜய் படமே கிடையாது.. டைட்டில்லயே வெங்கட் பிரபு தரப்போகும் சர்ப்ரைஸ்

Thalapathy 68: லியோ படத்திற்கு பிறகு தளபதி 68ல் விஜய் பிசியாக இருக்கிறார். இப்படத்தின் அறிவிப்பே யாரும் எதிர்பார்க்காத வகையில் வித்தியாசமாக வெளியானது. அதை தொடர்ந்து வெளிவரும் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களுக்கான ஆச்சரியம் தான்.

அதன்படி தற்போது வெங்கட் பிரபு டைட்டில்லையே ரசிகர்களுக்கு மிகப்பெரும் சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறாராம். பொதுவாக விஜய்யின் படங்களில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் சில முக்கிய அம்சங்கள் இருக்கும். ஆனால் இந்த தளபதி 68 அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.

டைம் ட்ராவல் மற்றும் குளோனிங் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகும் இப்படத்தில் விஜய் இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று மிகவும் இளமையாக காட்டப்பட இருக்கிறது. அதற்காக டி ஏஜிங் டெக்னாலஜியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Also read: தளபதி 68 பட குழுவை பாடாய்ப்படுத்தும் விஜய்.. சென்னை வந்ததும் பரபரப்பான வெங்கட் பிரபு

இது தவிர இன்னும் பல புது தொழில்நுட்பங்களை கொண்டு படத்தை எடுக்கவும் வெங்கட் பிரபு திட்டமிட்டு இருக்கிறாராம். அதன்படி அடுத்ததாக ஜப்பானில் ஷூட்டிங்கை நடத்த பட குழு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் இது விஜய் படமாக இருக்காது.

அதையும் தாண்டி ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும். மேலும் புதுவருட பரிசாக படத்தின் டைட்டில் அறிவிப்பும் வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து முதல் பாடல் என ஒவ்வொரு அப்டேட்டும் புத்தாண்டு ட்ரீட் தான். அந்த வகையில் தளபதி 68 யாரும் எதிர்பார்க்காத விஜய் படமாக வந்து ஆச்சரியப்படுத்த இருக்கிறது.

Also read: தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. சிம்புவுக்கு ஒர்க் அவுட் ஆச்சு, விஜய்க்கு செட் ஆகுமா?

Trending News