வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதிரடி ஆட்டத்திற்கு தயாரான விஜய்.. கேப்டனாக இருந்து வழிநடத்தும் வெங்கட் பிரபு

தளபதி விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். அடுத்து லோகேஷ் கனகராஜுடன் தன்னுடைய 67 வது படத்தில் இணையவிருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனும் விஜய்க்கு கதை சொல்லி இருக்கிறார். இப்போது வெங்கட் பிரபுவும் விஜயுடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு 2007 ஆம் ஆண்டு சென்னை 600028 படத்தின் மூலம் இயக்குனரானார். இளைஞர்களை மட்டுமே கேரக்டர்களாக வைத்து சென்னை கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட திரைப்படம். இது போன்றே வித்தியாசமான கதைக்களத்துடன் சரோஜா, கோவா, மங்காத்தா போன்ற படங்களை எடுத்தார்.

Also Read: விலகி ஓடிய அருண் விஜய்.. வெங்கட் பிரபுவை 4 திசையிலும் ஆட்டிப்படைக்கும் கெட்ட நேரம்

இப்போது வெங்கட்பிரபு விஜய்க்காக ஒரு ஸ்கிரிப்ட் உருவாக்கி கொண்டிருக்கிறாராம். அந்த ஸ்கிரிப்ட் கண்டிப்பாக விஜய்க்கு பிடித்து விடும் என்று கூறியிருக்கிறார். மேலும் இதுவரை விஜய் நடிக்காத கேரக்டராக இருக்கும் என்றும் இது விஜய் ரசிகர்களுக்கும் புதிய அனுபவமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.

வெங்கட்பிரபு விஜயுடன் இணைய இருப்பதாக அவ்வப்போது வதந்திகள் வரும். ஆனால் அதைப்பற்றி இவர்கள் இருவருமே ஏதும் பேசியதில்லை. இப்போது முதன்முறையாக இயக்குனர் வெங்கட்பிரபு மனம் திறந்து விஜய்க்கான ஸ்கிரிப்ட் பற்றி பேசியிருக்கிறார். மேலும் கண்டிப்பாக விஜயுடன் படம் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.

Also Read: லிங்குசாமியை அடுத்து விழி பிதுங்கி நிற்கும் வெங்கட்பிரபு.. 100 கோடி வசூல் எடுத்தும் இதான் நிலைமை

அஜித்தின் 50 வது படமான மங்காத்தா படத்தை வெங்கட்பிரபு இயக்கினார். இதுவரை அஜித்தை பார்க்காத ஒரு கேரக்டரில் காட்டினார். அஜித், அர்ஜுன், த்ரிஷா, பிரேம்ஜி, மகத், வைபவ் இந்த படத்தில் நடித்திருந்தனர். இதுபோலவே விஜய்க்கும் ஒரு வித்தியாசமான கதையை கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெங்கட்பிரபு சிம்புவை வைத்து மாநாடு என்னும் படத்தை இயக்கினார். இந்த படம் சிம்புவுக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. டைம் லூப் என்னும் சைன்ஸ் லாவை மையமாக கொண்ட திரைப்படம் இது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது என்றாலும் வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

Also Read: 4 இயக்குனர்கள் வெவ்வேறு கோணத்தில், விக்டிம் விமர்சனம்.. பா ரஞ்சித் நீங்க வேற லெவல்

Trending News